Monday, December 9, 2013

சொல்லுதலின் வகைகள்

தமிழ்ச்சொலமுதும்  அதன் தித்திக்கும் பொருட்சுவையும்

சொல்லுதலில் இத்தனை வகை உண்டு...
சொல்லுதல் - என்ற சொல்லுக்கு ஏறக்குறைய 39 சிறப்புப் பொருள்கள் (வகைகள்) உள்ளன.

அவையாவன:

1. அசைத்தல் - அசை அழுத்தத்துடன் சொல்லுதல் (அசை - உறுப்பு)
2. அறைதல் - அடித்து (வன்மையாய் மறுத்து ) சொல்லுதல்
3.இசைத்தல் - ஓசை வேறுபாட்டுடன் சொல்லுதல்
4. இயம்புதல்  - இசைக்கருவி இயக்கிச் சொல்லுதல்
5. உரைத்தல் - அருஞ்சொற்களுக்கு அல்லது செய்யுளுக்கு பொருள்                                                      சொல்லுதல்

6. உளறுதல் - ஒன்றிருக்க ஒன்றைச் சொல்லுதல்
7. எண்ணுதல் - (எண்ணி) என்று சொல்லுதல்
8. ஓதுதல் - காதுக்குள் மெல்லச் சொல்லுதல்
9. கத்துதல் - குரல் ஓங்கி ஒலியெழுப்பிச் சொல்லுதல்
10.கரைதல் - அழைத்துச் சொல்லுதல்

11. கழறுதல் - இடித்துச் (இடித்துரைத்துச்) சொல்லுதல்
12. கிளத்தல் - இன்னதென்று குறிப்பிட்டுச் சொல்லுதல்
13.கிளத்துதல் - குடும்ப வரலாறு சொல்லுதல்
14. குயிலுதல் குயிற்று - குயில் போல் இனிய குரலில் சொல்லுதல்
15. குழறுதல் - நா(நாக்கு) தழுதழுக்கச் சொல்லுதல்

16. கூறுதல் - ஒன்றைக் கூறுபடுத்திச் சொல்லுதல்
17. சாற்றுதல் - பலர் அறியச் சொல்லுதல் (பறை சாற்றுதல்)
18.செப்புதல் - வினாவுக்கு விடை சொல்லுதல்
19. நவிலுதல் - நாவினால் ஒலித்துப் பயிலுதல்
20. நுதலுதல் - ஒன்றைச் சொல்லித் தொடங்குதல்

21. நுவலுதல் - ஒரு நூலின் நுண்பொருள் சொல்லுதல்
22. நொடித்தல் - கதை சொல்லுதல்
23.பகர்தல் - பண்டங்களைப் பகுத்து விலை சொல்லுதல்
24. பறைதல் - மறை (ரகசியம்) வெளிப்படுத்திச் சொல்லுதல்
25. பன்னுதல் - நிறுத்தி நிறுத்திச் சொல்லுதல்

26. பனுவுதல் - செய்யுளால் புகழ்ந்து சொல்லுதல்
27. புகலுதல் - ஒன்றை விரும்பிச் சொல்லுதல்
28. புலம்புதல் - தனக்குத்தானே சொல்லுதல்
29. பேசுதல் - ஒரு மொழியில் சொல்லுதல்
30. பொழிதல் - இடைவிடாது சொல்லுதல் (சொற்பொழிவாற்றுதல்)

31. மாறுதல் - உரையாடலில் மாற்றிச் சொல்லுதல்
32. மிழற்றுதல் - குழந்தையைப் போலச் சொல்லுதல்
33.மொழிதல் - சொற்களைத் தெளிவாக விளக்கிச் சொல்லுதல்
34.வலத்தல் - கேட்பார் மனத்தைப் பிணிக்கச் சொல்லுதல்
35. விடுதல் - மெள்ள வெளிப்பட்டுச் சொல்லுதல்

36. விதத்தல் - சிறப்பாக எடுத்துச் சொல்லுதல்
37. விள்ளுதல் - இடைவெளி விட்டுச் சொல்லுதல்
38. விளத்துதல் - ஒன்றை விவரித்துச் சொல்லுதல்
39. விளம்புதல் - ஓர் அறிவிப்பைச் சொல்லுதல்


  

Sunday, August 4, 2013

உயிர்பிரிக்காத இரத்தம் !

நட்பூக்கள்... 

குணங்கள் பல : மணம் ஒன்று !
(சு)வாசங்கள் பல : நேசம் ஒன்று !
வண்ணங்கள் பல : எண்ணம் ஒன்று !
இதயங்கள் பல : துடிப்பு ஒன்று !
பாதைகள் பல : பயணம் ஒன்று !
கைகள் பல : நம்பிக்கை ஒன்று !

நீ - என் கண்ணாடி
நான் - உன் பிம்பம்
நம் நட்பு - கண்கள்!

நீ - என் சிறகு
நான் - உன் வானம்
நம் நட்பு - காற்று !

நீ - என் குழல் 
நான் - உன் மூச்சு 
நம் நட்பு - இன்னிசை !

நட்பு - நாம் நமக்காய் தேடி நேசிக்கும் முதலாவது அந்நியம் !

நமக்காய் பாயும் உயிர்பிரிக்காத  இரத்தம் !

Saturday, August 3, 2013

நட்பு(பூ)க்கள்

என் இனிய நட்பு(பூ)க்கள் அனைவருக்கும்
நண்பர்கள் தின நல்வாழ்த்துக்கள்

நட்புக் கவிதைகள் சில உங்கள் பார்வைக்கு...
படித்தபொழுது பிடித்ததை பகிர்கிறேன் இப்பொழுது...  

* ஆதி மரத்தின்
ஒற்றை ஆப்பிள் கனியின்
பயன்பாடு காதல்
பண்பாடு நட்பு

* எப்போதும் உடன்பட்டால்தான் காதல்
   முரண்பட்டாலும் நட்பு

* நட்பெனப் படுவதுயாதெனின்  முத்தம் தவிர்த்து
  எச்சில் பகிரும் முதலாவது அந்நியம்

* நட்பெனப் படுவது யாதெனின்
   கண்ணீரோ புன்னகையோ
    முன்படுகிற முதல் விரல்
 
* சொல்வதற்கு ஒன்றுமில்லை
   என்றான பின்பும்
   சொல்வதற்கு இன்னும்
   ஆயிரம் இருக்கிறது நட்பில்
   அதிகம் அதிகமாய்

 * உணவில் உப்பு
    உயர்வில் நட்பு

*  எந்த கல்லூரியில்
    எந்த வகுப்பில்
     யார் சேர்ந்தாலுமே
     யாருமே கற்பிக்காமல்
     கற்றுக்கொள்ளும் ஒரே பாடம் - தோழமை

 * ஒன்றாவது வகுப்பில்
    உடன் படித்தவன் கையை
    oracle வகுப்பில்
     உடன் படிக்கிறவன் கையுடன்
     ஒன்றாய் இணைக்க
     நட்பால்தான் முடிகிறது

*  எதெதுவோ தினமும்
    நினைவுபடுத்துகிறது
    உன்னை எனக்கு
    என்னை உனக்கு எதுவோ ?

  *  முடி திருத்துகிற கடையிலிருந்து
       மனம் திருத்துகிற காதல் வரை
       எல்லாப் பொழுதுகளிலும்
       நிரம்பித் தொடர்கிறான்
       நல்ல நண்பனவன்.

*  எந்த உறவின் பிரிதலிலும்
    ஓர் ஒட்டுப்பசையென
     நட்பு ஆறுதலளிக்கும்
     நட்பின் பிரிவை
     எந்த உறவும்
     ஒட்டி மறைப்பதில்லை

*  கைக்குட்டை, பேனா
     பரிசு கொடுத்தால்
     நட்பு பிரியுமாமே.....?
     கேட்டேன் உன்னிடம்
     "ஊஹும்....
       விஷம் கொடுத்தாக்கூட
       பிரியாது என்றாய்
      கண் வியர்த்தேன்

*  பருவமெய்திய குழந்தைக்குப்
    பாதி ஆசிரியை அவள் அன்னை
    மீதி ஆசிரியையாய்
    தலை வருடி பயம் விலக்கி
    அகம் நுழைந்து முகம் மலர்த்தி
    துணை நிற்கிற தோழி
    அன்னையுமாகிறாள்

*  பட்டப் படிப்பு வந்த பின்னாலும்
    பட்டப்பெயர் சொல்லி
    அழைக்கப்படுகையில்
    நரகமாய் ஒரு சுகம் நேரும்
    நம்மை அழைத்து வரும்
    பழைய நண்பனைப் பார்க்கையில்  






Thursday, January 24, 2013

குடியரசு தின வாழ்த்துக்கள்.





அனைவருக்கும் குடியரசு தின வாழ்த்துக்கள்.

உண்மையாக யார் இந்தியர் ?
எது உண்மை சுதந்திரம் ?

இந்தியாவில் வாழ்பவரெல்லாம்
இந்தியர் அல்லர்
எவருக்குள் இந்தியா வாழ்கிறதோ
அவரே உண்மையான இந்தியர் - இது
என்றோ ஒரு முகம் அறியாத கவிஞனின்
வார்த்தைகள் வரிகளாக வாசித்தது...

நமக்கு சும்மா கிடைக்கவில்லை சுதந்திரம்
தாளாத இன்னல்களை அடைந்து
சொல்லி மாளாத கொடுமைகளைச் சுமந்து
விட்டால் மீளாத இன்னுயிர்களையும், உதிரங்களையும்
கொட்டிக் கொடுத்து விட்ட உயிர்களுக்கு
சன்மானமாகக் கிடைத்ததே சுதந்திரம்
அதை சாதகமாக பயன்படுத்திக் கொள்வதில் தான் 
இன்று எவ்வளவு தந்திரம் - பெயர் சுதந்திரம்

எட்டி உதைத்தாலும் பெற்றவனுக்குத் தான் தெரியும்
பாசப் பிள்ளையின் அருமை
முட்டி மோதினாலும் முயன்று பெற்றவனுக்குத் தான் தெரியும்
பெற்ற பொருளின் அருமை
வெட்டி மாண்டாலும் அரும்பாடுபட்டவனுக்குத் தான் தெரியும்
பெற்ற விடுதலையின் அருமை

இந்த பாரில் பார் (Bar), தம் (புகை) தேடி அலையும்
எனதருமை இளைஞனே...
என்று நீ உண்மையாய் "பாரதம்" தேடி அலைவாயோ?

ஆனால் இன்று பெற்ற சுதந்திரம் எங்கு எப்படி
வாழ்கிறது என்று ஒரு பார்வை...

ஐந்திலேயே அதிகமாய் வளைய வைக்கும்
புத்தக மலைகளை முதுகில் சுமந்து கொண்டு
பிள்ளைகள் பள்ளிக்குப் போய் படித்துவிட்டு
பத்திரமாய் வீடு திரும்பும் வரை பாதி உயிரை
கையில் பிடித்து காத்திருக்கும்
பெற்றோருக்கு உண்டா உண்மை சுதந்திரம் ?

நடுஇரவில் தனியாளாக ஒரு பெண் நடந்து
செல்லும் "பொன்"னாளே நம் நாட்டிற்கு
உண்மை சுதந்திரம் வந்ததென்று
அன்று முழங்கினாரே அண்ணல் காந்தி
நாட்டின் இதயத்திலேயே நஞ்சை விதைக்கும்
நடுஇரவில் வெறிநாய்கள் ஒன்று கூடி
அழகுமலரை சூறையாடிச் சிதைத்தழிக்கும்
இந்த தேசத்தில் உண்டா உண்மை சுதந்திரம் ?

அடிநாக்கில் ருசி மறந்தாலும்
அடிவயிற்றில் பசி மறக்காத இந்த உலகத்திலே
உலகத்திற்கே பசிபோக்க படியளந்த
என் சேற்று உழவன் இன்று பிடி சோற்றுக்கும்
வழியின்றி வளர்த்துவிட்ட பிள்ளைகள்
நட்டாற்றிலே நிற்கதியாய் தவிக்க விட்டுப்போனது போல்
நட்டுவைத்த பயிரெல்லாம் வாய்க்காலில் நீரின்றி
கருகுவது காண மனம் பொறுக்காது
நடுநெஞ்சில் வலிவந்து அவன் உயிர்விடும்
இந்த தேசத்தில் உண்டா உண்மை சுதந்திரம் ? 

யானைகட்டிப் போரடித்த சோழவள நாட்டின்
பெருமையை பக்கங்கள் தோறும் தவறாமல்
புகட்டும் என் தமிழ் புததக சான்று கொண்ட மண்ணில்
இன்று உண்ண உணவுக்கு வழி(வகை)யின்றி
பயிரெல்லாம் உயிர்விட்டுபோக
தான் வளர்க்கும் மாட்டுக்கும் உணவின்றி
தொழிற்சாலையில் கழிவாகத் தூக்கியெறியும்
பஞ்சை நனைத்து போஜனமாக்கும்
இந்த தேசத்தில் உண்டா உண்மை சுதந்திரம் ?

தெருக்கோடியில் நிற்கும் ஏழையை
திரும்பிப் பார்க்கவும் நேரமின்றி
எங்கோ எதற்கோ எதையோ
வேக வேகமாய்த் தேடி அலையும் பெருங்கூட்டம்
ஒருபக்கம் - உள்நாட்டில் தேக்கிவைத்தால்(ள்)
கருப்பாகிப் போகுமென்று தூரத்து தேசத்திற்கு
நாடுகடத்தி வெள்ளையாக்கும்
வித்தை தெரிந்த வசதியான வியாபாரிகள் வாழும்
இந்த தேசத்தில் உண்டா உண்மை சுதந்திரம் ?

நதி, நீர், காற்று, வெளி, நிலம் என ஐந்தினைப்
படைத்தான் பகிர்ந்து வாழ் என்றான் இறைவன்
அதற்கு பஞ்சபூதங்கள் என்று பெயர் படைத்தான் மனிதன்
அப்படி பெயரிட்ட கோபத்தில்தானோ இன்று
பூதாகாரமாக வெடிக்கின்றனவோ
பஞ்சபூதப் பிரச்சனைகள் ?
தாகத்திற்கு சொட்டு நீர் அளிக்காமல்
மாண்டு போன பின்னே அணை திறந்து
வெள்ளமிட்டால் யாருக்குப் பயன் ?
இத்தேசத்தில் உண்டோ உண்மை சுதந்திரம் ?

கனவுகள் ஆயிரம் நெஞ்சிலுண்டு
திட்டங்கள் ஆயிரம் தாளிலுண்டு
சிந்தனைகள் ஆயிரம் புத்தியிலுண்டு
செயல்களை செய்யத்தான் இங்கே
கைகளைக் காணவில்லை, விரைவாய் வருவதில்லை 
அப்படியே கைகள் செய்திட வந்தாலும்
சுயலாபம் சுரண்டாமல், புறங்கையைச் சுவைக்காமல்
எந்த "நல்ல" மனமும் நன்மைக்கு இங்கே இடம் கொடுப்பதில்லை
இந்த தேசத்தில் உண்டா உண்மை சுதந்திரம் ?   

இதை எல்லாம் மீறி
எங்கள் வண்ணங்கள் வேறுபட்டாலும்
எங்கள் எண்ணங்கள் பலசமயம் மாறுபட்டாலும்
"அனைவரும் இந்தியர் " என்ற உணர்வு மட்டும்
உள்ளத்தில் உறுதியாய் பிரியாது என்றும்
உறைந்து நிற்கும் எங்கள் உயிர் மூச்சு பிரியும்(விடும்) வரை...

செங்கோட்டையில் என்றுமே செம்மாந்து பறக்கும்
நம் தேசியக்கொடிக்கு சல்யூட் அடித்தபடி....

மீண்டும் ஒருமுறை அனைவருக்காகவும்
"நல்ல" குடியரசு தின நல்வாழ்த்துக்கள்.
நாடு நலம் பெற வேண்டுமென்று....    
      

Wednesday, January 23, 2013

What is "LIFE" ?




Dear friends....
Do you wanna know What is "LIFE" ?
You continue below...

Life is Beautiful Dew.... there could be nothing simpler than that
Life is noticing the subtle things the butterfly fluttering,
the cuckoo singing, the raindrops falling, the flower blossoming,
Life is a rainbow that harnesses our dreams within the bounty of its colours...

Each second, each minute, each hour and each day is but a little life,
to be cherished as the most precious thing,
Life is acknowledging the Supreme Being power,
Life is an enthusiasm that envelops and binds us all...

Life is being proud of our nation, its progress, its achievements,
Life is to be lived, to be enjoyed and to be laughed with,
Life is sharing of the sorrows, about finding pleasure in the pains,
Sowing some smiles in the gains....

Life is about love, thoughts, feelings, experiences, sharings, empathies...
A serious of suspenseful and secret moments....
That's Life...

 ----- Honourable thanks for 2009 LIC OF INDIA calender.

The essence of this message is:
" Really Life is easy...
When we feel it, take it and make it easy".
 ----------- Really my quote.
                       

Saturday, January 19, 2013

Dilwale Dulhania Le Jayenge


हिंदी:
आप में से कितने इस रोमांटिक सदाबहार जलती हुई प्रेम गीत में अपने दिल खो दिया?
आप में से कितने अपनी सुंदर संगीत और प्यारा लाइनों में भंग?

तुझे देखा ये जान सनम ...
प्यार होता है दीवाना सनम ...


English:
Dilwale Dulhania Le JayengeDDLJ, a romantic comedy released in 1995 was declared an all-time blockbuster and the longest-running film in the history of Indian cinema. As of 2011, it was still playing at the Maratha Mandir theatre in Mumbai.

The legendary and epic love story Dilwale Dulhania Le Jayenge has completed 17 years of successful continuous run at the Maratha Mandir theatre in Mumbai today. DDLJ was released on 20th October 1995.
At the time of its release, DDLJ became the biggest blockbuster of the year, winning 10 Filmfare Awards and a National Award for best popular film of that year.

DDLJ is also one of the only two Indian films that have been included in the list of "1001 Movies You Must See Before You Die", the other film being Mother India.
DDLJ has beaten the record of Sholay as the longest-running film ever in Indian cinema. Here is wishing team DDLJ all the best for another 17 years of successful and continuous run!

தமிழ் :
மனம் மயக்கும் மஞ்சள்நிறச் சோலையிலே 
கண்ணைப் பறிக்கும் கடுகுப்பூ தோட்டத்திலே
வானிறங்கி வந்த வெண்முல்லைத் தேவதையாய் அவள்
வயலின் சுமந்து காதல் தொடுக்கும் மன்மதனாய் அவன்

கேட்கும் நெஞ்சம் மெழுகாய் உருகும்
தேனிசையின் பின்னணி நம்மோடு விரல்கோர்க்கும்
பொங்கி வழியும் இதயமெல்லாம் காதல் வெள்ளம்
அன்பு தொட்டிலில் ஊஞ்சலாடும் இருவர் உள்ளம்

இந்திய சினிமாவின் பொக்கிஷப் படைப்பாய்
காலங்கள் கடந்தாலும் இளமையாய்த் திகழும்
ஓர் அற்புத காதல் காவியம்.

பிடித்திருந்தால் விருப்பம் சுட்டுங்கள்.

    

Friday, January 18, 2013

A Short story



A Short story for you:

There is a little cute crab lives in a seashore. It has nobody to take care. The only relation for that little crab is the waves. The crab can share everything to the waves. The waves also share often the stories of the sea to its wonderful friend. They two can care for each other and nothing comes between them to hide. They can play in the sandy beach for endless of time.

One day the crab is running on the sea shore. The waves came with rush and quickly cleared the crab's footprints. Again the crab walked and again the waves to do so.

The crab asked the waves: "Oh! My beloved friend,  Why are you clearing my beautiful footprints? Don't you like that ever?"

The waves replied: "A fisherman is following you for a long time to catch you. You didn't noticed him. That's why I am clearing it soon. It is my unsaid duty to save my dear friend's life. I am there for you forever."

The crab hugged the waves with hands of true and deep love. 

The Essence of this story is:
"Pure relationship means caring beyond imagination."
"True friendship means caring beyond expectation." 

Tuesday, January 15, 2013

அயல்நாட்டு அறிவுரை



அன்பு நண்பர்களே !
அயல்நாட்டு அறிவுரை அறிவோம் !

சீன தத்துவஞானி கன்பூஷியஸ் - ன் சிந்தனைகள்
உங்கள் பார்வைக்கு...

1) என்றுமே உனது தாயைக் கலங்கவிடாதே! - ஏனெனில்
    அவர்களது கண்ணீர்த் துளிகள் கடவுளால் எண்ணப்படுகின்றன.

2) சரியானது எது என்பதை நன்கு உணர்ந்த பின்னும்
    அதை செய்யாமல் இருப்பது பெரிய கோழைத்தனம்.

3) எங்கே போனாலும் நீ உன் முழு இதயத்தோடு போ.

4) எல்லா ஒழுக்க நெறிகளுக்கும் உறுதியான அடிப்படையாக
    இருப்பது பெரும் பணிவுதான்.

5) உங்கள் பலத்தை நீங்களே நினைத்து பெருமிதம் கொள்ளாதீர்கள்;
    இந்த உலகத்தில் உங்களைவிடவும் பலசாலி ஒருவன் உண்டு என்பதை
    நினைவில் கொள்ளுங்கள்.

6) தன்னடக்கமே என்றும் வலிமை; அமைதியே அற்புதமான ஆற்றல்.

7) கோபத்தை அடக்கு; சிறு சிறு சச்சரவால் நீண்டகால உறவும், நட்பும் கூட
    முறிந்துப் போகும். (அதிகமாய் சேர்க்கப்படும் சிறு துளி உப்பு, சுவையான
    பண்டத்தை சீக்கிரம் குப்பையில் சேர்க்கும்)

8) நீ மற்றவர்களுக்குச் செய்யும் நன்மைகளின் மூலமாக உனக்குக் கிடைக்கும்
    மகிழ்ச்சிதான், எல்லா இன்பங்களையும் விட சிறந்தது.

9) கெட்ட காரியம் செய்ய எப்போதும் அச்சப்படு; நீ வேறு எதற்கும் அதிகமாய்
    அச்சப்படத் தேவையில்லை.

10) நீ வீட்டில் உள்ளவர்களுடன் மனம் நிறைய அன்போடு பழகு;
      அப்போதுதான் நாட்டு மக்களிடம் நன்கு பழக முடியும்.         

ஆயிரம் பழமொழிகள்


எனதருமை சே(சே - தோழர் )க்களே !
ஏன் இந்த ஆயிரம்,
எதற்கு இந்த ஆயிரம் என்கிறீர்களா?

உங்களுக்கு ஆயிரம் பழமொழிகள் சொல்லப் போகிறேன்...
உடனே வியந்து புருவம் உயர்ந்து, வாய் பிளக்க வேண்டாம்...

ஆயிரம் என்ற சொல் வரும் பழமொழிகளை
அன்போடு உங்களிடம் பருகிறேன்.

1) ஆயிரம் வீண் வார்த்தைகளை விட, இதயத்தை வருட
     இதமான ஒரு சொல் போதும்.

2) நொடித்துக் கொண்டு அமுது ஆயிரம் தருவதை விட,
     இன்முகத்தோடு இல்லையென்று சொல்வது சாலச் சிறந்தது.

3) ஆயிரம்முறை சிந்தனை செய்யுங்கள். ஆனால் முடிவை ஒரேமுறை
     சிந்தித்து முடிவெடுங்கள்.

4) ஆயிரம் நூல்களைக் கற்பதைவிட, அறிவும், அனுபவமும் நிறைந்த
     அறிஞர்களின் அறிவுரைகள் பயன்மிக்கது.

5) ஆயிரம் காக்கைகளை விரட்ட ஒரு கல் போதும்.

6) ஆயிரக்கணக்கான நெருங்கிய உறவினர்களைக் காட்டிலும்
    சமூக இரக்கஉணர்வுடைய உள்ளமுருகும் ஒருவர் எவ்வளவோ மேல்.

7) ஆயிரம் கோடி பணம் பகட்டாய் வைத்திருந்தாலும்
     உண்மையான அற்புத நண்பர்கள் இல்லாதவன் பரம ஏழை.

8) ஆயிரம் பேர்களை வென்றவனைவிட, தன்னைத்தானே வென்றவன்
     உண்மையிலேயே பெரிய வீரன்.

9) ஆயிரம் "போய்ச்" சொல்லி ஒரு கல்யாணத்தை நடத்தி வை.
     (இப்பழமொழி பின்னாளில் ஆயிரம் பொய் சொல்லி என்று திரிந்து போனது,
     உண்மையான பொருள் - ஆயிரம் முறை நமது உறவினர்களுக்கும்,
     சொந்த-பந்தங்களுக்கும் போய்ச் சொல்லியாவது ஒரு திருமணத்தை 
      நடத்தி வைக்க வேண்டும் என்பதே)

10) ஆயிரம் ரூபாயில் ஒரு காலணா குறைந்தாலும்கூட
      அது ஆயிரம் ரூபாய் ஆகாது.

Monday, January 14, 2013

A VISION TO MY DEAR DREAM FRIEND


A VISION TO MY DEAR DREAM FRIEND
 



Oh ! Charming Chum,
                                      You are my dear friend
                                       Graceful glorious grand giant

Hey ! Pleasing Pal,
                 
                      You are an ever liking pretty and pleasant portrait
                       I got you as the great God's gift

                       Always keep me in your mind
                       Treat me always with your heart's kind
                       Come and join with me as the blowing wind
                       Never forget and be faithful to me as better you bind
                       Without you my life becomes blind

                       You are the best one of my friends that I find
                        I want you to be with me ever as my lid
                        Your face seems like a beautiful bud
                        There is a colourful soil in your head
                        Sign and Sow me in your soul's land

                        Anytime you are my favorite brand
                        Nothing is more than you for me as so grand
                        Don't mistake me ever at any of life's bend
                        Mix and Mingle with my memories as a best blend
                        Tie and tingle me with your tidiest trend
                     
                        No matter should be there between us to hide
                        Mark and Merge my marvel memories in your heart's hill side
                        Please perceive and protect my affection which I most need
                        Your priceless and precious presence in me is growing like a seed
                        Compose confidence in me and hew an harmony of happiness you must feed

                        You are the permanent pendulum swinging in my lifetime as forever fixed
                        Pour purity of peace and prosperity in me as like a plenty of flowing flood
                        Our friendship must ever be eternal as like our's red blood
                        Focus and freeze me by your fantasy of friendship which should not be fade
                        Allover our friendship should spread the fragrance of spring which gives me glad

                        You are ringing in my mind as a lovely and loudly sound
                        Our friendship must set to be strong like an Unbreakable bond
                        Be stay with me like a serene sky but not like a casual colourless cloud
                     
                         So I Powerfully pledge our friendship has no end, till our lives END.


      
                            

அன்பு என்னும் அச்சாரம்


அன்பு  என்னும் அச்சாரம் 




அன்பு ஒன்றே அலுக்காமல் சுழல்கின்ற
ஞாலத்தேரின் அடிஅச்சாரம்

உலக உயிர்கள் யாவும்  யாரும்
உரைக்காமலே உணர்ந்துக்கொள்ளும்
உலகின் உன்னத மொழி

மண்ணுயிர்கள் யாவைக்கும் மகேசன்
மரணம் வரையில் ம(றை)றக்காமல்
மானசீகமாய் வழங்கிய
ஈடு இணையில்லா மகத்தான பரிசு...

எத்தனை ஆயுதம் புத்தியின் நவீன பாசறையில்
மனிதன் படைத்தாலும் அவை யாவும்
அவன் உயிரைக் குடி(எடு )க்கும் பணியை மட்டுமே
என்றென்றும் சிறப்பாகச் செய்யும்
ஆனால் அன்பென்னும் ஆயுதமே பாசவலை வீசி
அவன் மனங்களை ஆயுளுக்கும் கட்டிபோட்டு
அடிமையாக்கிக் கொல்லும்.

திருவாய் மொழியும் இவ்வுலகில் பிறந்த
எம்மொழியின் அகராதியிலும்
புரிந்துக் கொள்ளவும், தெரிந்து கொள்ளவும்
எவ்வார்த்தையின் துணையும்
தேவைப்படாத மொழி

அதுவே அன்(பு)பின் மொழி....
அன்புச் செங்கோல் ஏந்தி உலகை ஆளுவோம் !
வெறுப்பு என்பதை விஷத்தை என்றும்
விலக்கிவைத்து வாழ்ந்திடுவோம் !

Sunday, January 13, 2013

உள்ளத்தின் உறுதி


உள்ளத்தின் உறுதி





உள்ளத்தின் உறுதி இரும்பாய் இருக்கும்போது
உடலின் ஊனம் துரும்பானால் கவலையென்ன?

உள்ளத்தின் இமய வேர்கள் 
உடலின் பாதளத் தரைவரை
ஊடுருவி பற்றிப் பாய்ந்துவிட்ட பிறகு
உலர்ந்து சருகாகிப் போகுமே
ஊனப் பறவையின் சிறகு...

ஊனத்தின் உறையும் ஊதக்காற்று
உள்ளத்தில் வேரோடிய வைர விருட்சத்தை
உயிர் உள்ளளவும் அதை அணுவளவும் அசைத்திட முடியாது...

உடலின் ஊனக்காயங்களை உதறிவிட்டு
உள்ளத்தின் உடைத்தெறியும் கூரிய
உளிநுனிகளால் அதைச் சிதறடித்துவிட்டு
உவகையாய் அதை உருமாற்றிக் கொண்டால் 
உடையாமல் மிளிரும் சிலையாக வாழ்க்கை ஒளிரும் !   

உடலின் ஊனம்
உயிரின் இறுதி வரை கூடவே வந்தாலும்
உடனிருக்கும் அதைத் துணையிருக்கும்
உதிருகின்ற தூசியாய் துச்சமெனக் கருதித் தட்டிவிட்டு  வாழு !

உடையணிந்து அமர்ந்திருக்கும் தெய்வமும் எழுந்து நின்று
உடன் வைத்திருக்கும் கைகளை எல்லாம் ஒன்று திரட்டி
உண்மையான மரியாதையுடன் கைகூப்பி
உனக்கு வாழ்த்துக்களுடன் வணக்கம் சொல்லும் !      

என் அருமை மகள் பிறந்த அன்று !




நண்பர்களே ! நெடுகாலம்முன்பு ஓர் தமிழ் சஞ்சிகையில் வெளிவந்த ஓர் கவிதை இது... நான் மிகவும் ரசித்தேன்... இதோ நீங்களும் ரசிக்க உங்கள் கனிவான பார்வைக்கு படைக்கிறேன்...

கவிதை தலைப்பு : என் அருமை மகள் பிறந்த அன்று !

கவிதைக்கான சுழல் : பரம்பரை பரம்பரையாக முதல் குழந்தை ஆணாக மட்டும் பிறக்க வேண்டும், ஆணாக மட்டுமே இருக்க வேண்டும் என்று நினைக்கும் வைராக்கிய குடும்பம் அது... அக்குடும்பத்தின் மூத்த மருமகள்
கருவுற்றிருக்கிறாள். இரு வீட்டார் தரப்பிலும் அனைவரது வேண்டுதலும் ஆணாக மட்டுமே இருக்க வேண்டும் என்ற வரம். மழலை அனைவரின் கனவையும் பொய்யாக்கிப் பிறந்தது. ஆம், அது ஒரு அழகிய பெண் குழந்தை.
எதிர்பார்ப்புகளுக்கு கிடைத்த எதிர்பரிசு. பெற்ற அன்னையும் குழந்தை முகம் காண மறுக்கிறாள். உற்றமும், சுற்றமும் மனம் சுருங்கிப் போய் நிற்கிறது.

இந்த சூழ்நிலையில் அக்குழந்தையின் தந்தையின் எண்ணங்களும், சிந்தனைகளும் இங்கே வார்த்தைகளாக, உங்களுக்கு கவிதையாக...

" அருமை மகளே!
நான் மணந்த வாச மலரில் பூத்த சிறு மலரே !
மருத்துவமனையின் உள்ளே உன் தாய்
நகம் கடித்து வெளியே நின்றேன் நான் !
மகன்தான் பிறப்பான் என்றே எங்களது
அனைவர் மூளை மேடைகளிலும் ஒரே கற்பனை
எங்கள் இருவரின் நூலிடையே வேண்டுதல் நெசவு !
கதைப் பின்னலில் ஓர் எதிர்பாராத மின்னலாக நீ !

மகளே ! நீ பிறந்தாய் என்றதும் உன்னைப் பார்த்த
அனைவரது மன ஈர மண் வற்றி பாலைவனக் காற்று !
கண்கள் வானில் அம்புகள் குத்தின !
கடல் அலை ஆனது உடல் இரத்தம் !
சுவையால் பிறந்தது சுமை ஆகியதே என்று
தொங்கிய தலை - தோளில் விழுந்தது அனைவருக்கும் !

அறையினுள்ளே செல்கிறேன் - உன் தாய் முகம்
ஒளி தொலைத்த விடியல் விளக்காய்
வானில் கலைந்து மிதக்கும் வெண்முகிலாய்
என்னைப் பார்க்காது எதிர்பக்கம் திரும்பி
ஒரு சொட்டு நீரை ஒளித்து வைத்தது !

"பெண் பிறந்தால் என்ன இப்போது?"
நம் நாட்டுக்குப் பெயரே - பாரதமாதா!
நம் மொழிக்குப் பெயரோ - தமிழன்னை!
வணங்கும் தெய்வமும் பெண் தானே 
கலைமகள், பொன்மகள், மலைமகள் என்று !
நம்மைச் சுமக்கும் பூமியும் ஒரு பெண் - பூமித்தாய் !
துள்ளி ஓடும் வெள்ளி நதிகளும் பெண்தான்
கங்கை, யமுனை, நர்மதா, சிந்து, காவேரி என்று !

நான் அடுக்கடுக்காய் சமாதானக் கோட்டைகளை
கட்டினாலும் உன் அன்னை நகைக்காத சிரிப்பால்
அத்தனையையும் சடாலென்று உடைத்தாள் !
நான் கைநழுவியப் பானையாய் தூள் தூளாய்
சிதறிப் போய் சிலையாகி நின்றேன் !

"நீங்கள் சொல்கின்ற நாடு, மொழி, நதிதேவியர்க்கு எல்லாமே
இன்னும் திருமணம் இல்லையே இதுவரை
ஒருவேளை வரதட்சணைக்குப் பயந்தே அவர்கள் யாவரும்
கைபிடிக்க கரமின்றி காலம் கடத்துகின்றனரோ - கன்னியராய் !
என்றவாறு முறைத்தாள் உன் தாய் முல்லை !
விளக்க முடியாத கேள்வியின் விடையாக
எடுத்துச் சொல்ல முடியாத ஏட்டுச்சுரைக்காயாக
அவள் முன்பு அடி மறந்து நின்றேன் !

தொட்டிலில் படுத்திருக்கும் என் தங்கநிறப் பனிக்கட்டியே !
"ஆணா, பெண்ணா !" - அது தேவையில்லை எனக்கு
பொற்பெட்டகத்தில் பிறந்த தங்க முத்துக்களை
உரசிப்பார்த்து சோதித்து அறிவது பிடிக்கவில்லை எனக்கு !

சரி இருக்கட்டும்... அவள் ஒரு புறம்...
என் நண்பர்களின் முகத்தில்
நைந்த கம்பியில் மின்சாரம் ஏறிய இறுக்கம்
எடுத்துக்கொள்ள இனிப்பு நீட்டினேன்
எனக்கு குழந்தை பிறந்தது என்று...
எடுக்கும் கைகளில் ஏனோ பிடிப்பில்லா தயக்கம்
ஆண்கள் மட்டுமா? - இல்லை இல்லை
எனது அம்மாவின் ஆசையே - முத(லி)ல் பேரன்தான்
எனது துணைமயிலின் தாய்க்கும் ஆசை அதுதான்
"பிரசவத் தேர்வில் தனது மகள் தோற்றுப்போய்விட்டாளாம் !

என் அக்கா, தங்கை, எதிர், அண்டை வீட்டுத்
தாய்க்குல மனங்களில் எல்லாம் ஏனோ
மனதோரம் ஒதுக்கல்கள் - உதட்டின் பிதுக்கல்கள் !

என் பாட்டியின் சொல் என்ன தெரியுமா?
"ஆணோ, இல்லை பெண்ணோ - இது ஆண்டவன் சித்தம்"
ஒருவேளை பக்திச்சொல்லா இது?
வாழ்ந்து முடிந்த நெஞ்சத்தின் வைரச் சொல்லா இது?
இல்லை பிறந்துவிட்டது... பிறந்ததை என்ன செய்வது என்ற
பெருஞ்சங்கடத்தை சலிப்போடு
செரித்துச் சீரணிக்கும் ஒரு சித்தாந்தச் சொல்லா இது?
என் அன்புக்கிழவி தெளிவாய் என்னைக் குழப்பிவிட்டாள்

ஆனாலும் என் முத்தான மகளே !
ஆழிசூழ் உலகின் அழகான ஆடிப்பிறையே !
எத்தனை உள்ளங்கள் உன்னை வெறுத்தாலும்
ஒரு மகளை அவளின் "அப்பாக்கள்" என்றுமே வெறுப்பதில்லை !

ஒரு மகன் அப்பாவுக்கு சண்டைச்சேவல்
ஆளாகிவிட்டால் அவன் நண்பன்!
தோள்தாண்டிவிட்டால் அவன் தோழன் !
ஆனால் எப்போதும் என்றென்றும்
அப்பாக்களுக்கு மகள்கள் வளருவதே இல்லை !
இருந்தும் மகளே ! - நீ எனக்கு எப்போதும்
அடிநா திகட்டாத அச்சு வெல்லம் !
அடிநெஞ்சு இனிக்கின்ற அமுதச் செல்லம் !

அன்பு மகளே ! ஒரு உண்மையான உளவியல் இரகசியம்
ஒன்று உண்டு தெரியுமா உனக்கு?
ஆண் குழந்தைகள்: "அம்மாவின் தோளை விடாத குரங்குக்குட்டிகள்!"
பெண் பிள்ளைகள்: " அப்பாவின் முகம் விரைவில் அறிந்து
ஆனந்த மின்னலோடு அம்மாவின் மடியில் இருந்து
அப்பாவின் தோளுக்குத் தாவும் அணில் பிள்ளைகள்!"
என்றும் என் அன்பான அணில் பிள்ளை நீ !

என் வாழ்க்கையை வண்ணமாக்கிய வானவில்லே!
என் கனவுப்பூந்தோட்டத்தில் விளையாட
ஆசையுடன் ஓடிவரும் பெண்மயிலே!
உன் அன்னையின் பாராத அன்பு
குத்துகின்ற முள்மெத்தை ஆனாலும்
அவளின் பொன்மடி முள்முடி ஆனாலும்
தாங்கிக்கொள்ள நீ கண்மூடித் தூங்கிக்கொள்ள
தந்தையின் திண்ணமான தோள் உண்டு உனக்கு...
பட்டுப் பஞ்சணையாக - பாசம் தேக்கும் நெஞ்சணையாக...

எனவே நம்பிக்கையோடு வா மகளே...
என்னை நம்பி கையோடு வா மகளே....    
    
                

             

இறைவா... நீ செத்துத் தொலை



நண்பர்களே !
தமிழர் படுகொலைகள் குறித்து வித்தகக் கவிஞர் பா.விஜய் அவர்கள்
எழுதிய "சமர்" என்ற கவிதை தொகுப்பிலிருந்து
ஒன்று உங்களோடு பகிர்கிறேன்...

நடந்து நடந்து
நாங்கள் துவண்டபோது
அலறினோம்
ஏன் களைத்தோம் என்று...

முகாம்களில் தங்கி
மூச்சு விட்டபோதுதான்
முனகினோம்
ஏன் பிழைத்தோம் என்று...

உலகில் கண்டறியப்படும்
ஒவ்வொரு நவீன ஆயுதமும்
ஒரே வேலையைத்தான் செய்கின்றன
அப்பாவி மக்களை
அடியோடு கொல்வதை !

பூட்ஸ் கால்கள் நசுக்கிய
எங்கள் மர்மப் பகுதிகள் கத்தின
இறைவா...
நீ செத்துத் தொலை என்று...  

உண்மைக் காதல் எது?

 
உண்மைக் காதல் எது? 



இந்த உலகத்திலேயே மிகவும்

கனிந்த, கவர்ந்த, கண்ணியமான,
பரந்த, புனிதமான, பவித்ரமான,
உயர்ந்த, உன்னதமான, உண்மையான,
அழகான, அன்பான, ஆத்மார்த்தமான

காதல் எது தெரியுமா நண்பர்களே ?

படத்தைப் பாருங்கள் புரியும்
அதிலே பதில் உள்ளது தெரியும்

உங்களுக்குப் பிடித்திருந்தால் விருப்பம் (like) சுட்டுங்கள்.
     

Saturday, January 12, 2013

பொங்கல் வாழ்த்து


பொங்கல் வாழ்த்து  




அனைவருக்கும் இன்பம் பொங்கும் பொங்கல்  நல்வாழ்த்துக்கள்.

புதுப்பானைப் பூச்சுற்றி
பொன்மஞ்சள் கிழங்கெடுத்து
செஞ்சீனி சுமக்கும் கரும்பு நட்டு
பதமாய் பக்குவமாய் வயல் விளைந்த
கைகுற்றல் பச்சரிசி போட்டு
பொங்கி வரும் பால்குடமாய் பொங்கும் உள்ளத்தோடு
கண்கட்டி உறியடித்து குதூகலமாய்
நாம் கொண்டாடிய நன்னாளாம்

அடிநாக்கில் ருசி மறந்தாலும்
அடிவயிற்றில் பசி மறக்காத
இந்த மானிட உலகில் வாழும்
வயலில் விதைகளோடு தன் வாழ்வையும்
சேர்த்தே பயிரிடும் உழவனின் உயிர் பிழைக்க

மணிமணியாய்க் கதிர்விடும் மழலை நாற்று வளர ஒளி கொடுக்கும்
உலக உயிர்க்கெல்லாம் இதமாய் வெப்பம் அளிக்கும்
கதிரவனுக்கு நன்றியோடு கைகூப்பும் தைத்திருநாளாம்

அந்த பொங்கல் திருநாள் எங்கள் வாழ்வில் இனி
எத்தனை முறை இனிப்பாய்ப் பொங்கினாலும்
என்றென்றும் மறக்க முடியாது இந்த பொங்கல்...

நித்தம் பால் சுண்டி இனிக்கின்ற தேனூறும் அக்கார அடிசிலாய்
என்றும் காலம் சுண்டி இனித்திடும்
நெஞ்சூறும் இந்த கலையாத நினைவுகள்...

என் இனிய கல்வியியல் கல்லூரி நண்பர்களோடு
அன்று வந்த இந்த இனிய நாளை
அன்போடு நினைவு கூறுகிறேன்.
    


பாரதம் பெற்றெடுத்த வீரத்துறவி


பாரதம் பெற்றெடுத்த வீரத்துறவி




புண்ணிய பூமியாம் பாரதத்தின் ஆன்மீகப் பெருமையை
உலக அரங்கில் சொற்பறைசாற்றிய வீரத்துறவி

"அமெரிக்காவின் சகோதர சகோதரிகளே" என்று
ஆரம்பித்த அன்புப் பேச்சில் அகிலத்தையே கட்டிப்போட்டு
அன்பின் தாத்பர்யத்தை வீரமுரசிட்ட ஞானத்துறவி

தேச பக்தியை நெஞ்சில் உரமிட்ட நூறு இளைஞர்களை
வரமாய்க் கேட்டு இத்தாய்த்திருநாட்டை வல்லரசாக்க
நூற்றாண்டுகள் முன்னரே கனவு கண்ட காவி(ய)த்துறவி

நண்பர்களே !
சுவாமி விவேகானந்தரின் 150 வது பிறந்த நாள் விழா இன்று.
எக்காலமும் வீரத்தை உள்ளத்திலே விதைக்கும்
அவரின் தீரப் பொன்மொழிகள் சில உங்களோடு பகிர்கிறேன்.

1) எந்த வேலையையும் தனது விருப்பத்துக்கு ஏற்றவாறு மாற்றிக் கொள்பவனே சிறந்த அறிவாளி.

2) மலை போன்ற சகிப்புத்தன்மை, இடைவிடாத முயற்சி, எல்லையற்ற நம்பிக்கை இவைதாம் நற்காரியத்தில் வெற்றியைத் தரும்.

3)உண்மைக்காக எதையும் தியாகம் செய்யலாம்; ஆனால் உண்மையை மட்டும் எதற்காகவும் தியாகம் செய்யக்கூடாது.

4) நீங்கள் மகத்தான பணியைச் செய்யப் பிறந்தவர்கள் என்பதில் ஆழ்ந்த நம்பிக்கை வையுங்கள்.

5) மக்கள் என்ன வேண்டுமானாலும் சொல்லட்டும். நீங்கள் உங்களது சொந்த, உண்மையான, உறுதியான முடிவில் பிடிப்புடன் இருங்கள்.

6) நான் எதையும் சாதிக்க வல்லவன் என்று சொல்லுங்கள். நீங்கள் உறுதியுடன் இருந்தால் பாம்பின் விஷம்கூட சக்தியற்றதாகிவிடும்.

7) நீ உன் குறிக்கோளில் வெற்றியடைய வேண்டுமானால் அதைப் பற்றிய எண்ணம்  உன் உடல் முழுவதும் பரவி இருக்க வேண்டும்.

8) உங்களுக்குத் தேவையான எல்லா வலிமைகளும் உங்களுக்குள்ளேயே குடிகொண்டிருக்கின்றன என நம்புங்கள்.

9) நமது நெற்றியில் சுருக்கங்கள் விழட்டும்; ஆனால் இதயத்தில் சுருக்கம் விழவேண்டாம். ஏனெனில் இதயம் கிழடு தட்டக்கூடாது.

10) மனிதன் எந்த அளவுக்கு உயர்ந்தவனாகிறானோ அந்த அளவுக்குத் தக்கபடி அவன் கடுமையான சோதனைகளைக் கடந்து செல்லவேண்டும்.

கவனம் இளைஞர்களே !!!
எதிர்கால இந்தியா உங்கள் உள்ளங்கைகளில் !!!
  

 

Friday, January 11, 2013

போகிறாள் அவள் !




நண்பர்களே ! இது ஒரு காதல் கவிதை....

கொஞ்சிக் கொஞ்சி உயிரைக் கொல்லும்
இதயக்கோவிலில் தஞ்சம் கொள்ளும்
சின்னச் சின்ன சிரிப்பில் நெஞ்சம் அள்ளும்
ஒற்றைப் பார்வையில் உள்ளம் துள்ளும்
ஓர் வஞ்ச(க) கஞ்ச வஞ்சி - அவள்
பஞ்சாய்ப் பிரிந்து போகும் போது
ஓர் நஞ்சாய் விளைந்தது இக்காதல் கவிதை...

முன் அறிவிப்பு : இது கொஞ்சம் நீளமானது...
எனவே பொறுமையாக ( இருக்கும் போது ) படிக்கவும்.

காதலை வெறுப்போர் இவ்வுலகில் யாருமில்லை.
உண்மைக் காதலை மறுப்போர்க்கு மனிதர் என்று பேரில்லை
உள்ளக்கரைகள் வந்து மோதாத அன்பின் அலைகள் ஏதுமில்லை
கண்கள் பேசும் வார்த்தைகள் இவ்வுலகின் எம்மொழி
அகராதியிலும் நிச்சயம் இடம் பெறவேயில்லை...     

கவிதை தலைப்பு : போகிறாள் அவள் !

காதல் குளத்தில் காலாட்டிக் கொண்டே
இயல்பாய் கல்லெறிந்து விட்டு எழும்
அதன் அலைகளில் கால்நனைத்துக் களவாடிப் போகிறாள் அவள் !

பார்த்தவுடனே பார்வையைப் பறிக்கும் மின்சார மின்னலாய்
விழி அம்புகளில் ஆலமை அதிகமாய்த் தடவி
என் இதயத்தைக் குறிவைத்து எய்தி
அதை ஆறாத காயக்களமாக்கிப் போகிறாள் அவள் !

ஆழமான ஆழியிலே பிறந்த வெண்சங்காய்
உயர்ந்திருக்கும் அவள் கழுத்தின் பக்கத்து நுனியில்
அழகான கேள்விக்குறியாய் வ(வி)ளைந்திருக்கும்
மாந்தளிர் செவியின் உத்திரத்திலே துளையிட்டு
தூக்கிலிட்டு தொங்கிச் சிணுங்குகின்ற சிமிக்கியாய்
என்னை துக்கத்தில் தவிக்கவைத்து போகிறாள் அவள் !

பஞ்சுப் பாதம் மண்மீது ஜதி சொல்லி கொஞ்சி நடக்கையில்
வழியில் ஓர் ஜீவனின் வாழ்வையும் வஞ்சிக்கக்கூடாதென
மிகுந்த எச்சரிக்கையாய் மிதிபடாது மென்மையாய்
பாதைக்கு நல்ல பண்ணிசைத்து சுரம் சேர்க்கும்
மலர்ப்பாதம் முத்தமிட்டே மயங்கிக் கிடக்கும் அவளின்
வெள்ளிக் கொலுசொலித்து என்னை மயக்கிப் போகிறாள் அவள் !

முற்ற முற்ற தலைக்குனியும் செவ்வாழையாய்
படிக்க படிக்க அறிவூறும் அரிய புத்தகமாய்
கதிர் பெருகப் பெருக தலைசாயும் நெற்கதிராய்
வீதியில் வெண்பற்களைக் காட்டி சிரிக்கும் குழல் விளக்காய்
கருங்கோரைப் பயிரெனவே மயிர் வளர்ந்திருக்கும் தலையில்
நடுவெள்ளை வரப்பாய் உச்சிவரை நேர்வகிடெடுத்து
தலைகவிழ்ந்த தாமரையாய் தலைக்குனிந்து போகிறாள் அவள் !

அசுரமாய் வீசிடும் கடும் சூறைக்காற்றில்
ஆலமரமே அடிவேரோடு சாய்ந்தாலும்
சமயோசிதமாய் சிந்தை கொண்டு செயல்பட்டு
சாதுர்யமாய் சூழ்நிலையைச் சமாளிக்கும்
ஆற்றுமேட்டில் அழகாய் காற்றசைத்தால் ஆடி நிற்கும்
நாணலெனவே நடை பயின்று நடந்து போகிறாள் அவள் !  

மென்மையாய் பணிவு போர்த்திய பெண்மையாய்
வானவெளியில் காற்றடிக்கும் திசையெல்லாம்
கலைந்து போகும் வெண்மேகமாய் என்னைக் கடந்து
வேகமாய் வீசும் காற்றிலே குழம்பித் தவிக்கும்
திசைக்காட்டியாய் என்னை அலைகழித்துப் போகிறாள் அவள் !

காய்ந்திருக்கும் பருவச் சுள்ளிகளை சேகரித்து
அன்பிருக்கும் காதல் பொறிகளை கண்களால் உரசி விட்டு
புகைந்திருக்கும் தீயை துப்பட்டாவால் விசிறிவிட்டு
நெஞ்சுருகும் நெய்யூற்றி அனல் கொழுந்துகளை வளர்த்து விட்டு
துடித்திருக்கும் என் இதயத்திற்கு இதமாய்த் தீ மூட்டிவிட்டு
பதமாய்க் குளிர்காயச் சொல்லிப் போகிறாள் அவள் !

விழிதடாகங்களைச் சுற்றி வட்டமிடும் கருவண்டு கண்களுக்கு
நீள்வட்டமாய் நாள்தோறும் அவள் பூசிடும் கார்மையென
ஆளில்லா நள்ளிரவில் குவிந்திருக்கும் கும்மிருட்டில்
முதன்முதலாய்த் திருடத் துணிந்து வீடு புகும்
பழக்கமில்லா திருடனின் கைகளைப் போல
என் உள்ளம் நடுங்கவைத்து போகிறாள் அவள் !

காக்கைகளும் குருவிகளும் கூட்டமாக அமர்ந்து
காலைநேரத்தில் கூடிக்கூடி மும்முரமாய் ஊர்க் கதைகள் பேசும்
கனமான மின்கம்பி கடத்துகின்ற மின்சாரமாய்
கணப்பொழுதில் என்னைக் கடத்திப் போகிறாள் அவள் !

உயிர்த்திரியை உயரமாய் உயர்த்தி விட்டு
காதல் தீபம் அதன் தலையில் ஏற்றி வைத்து
தன்னைச் சுற்றி இருளில் தவிப்போருக்கு
மெய் உருகி உருகி வெளிச்சம் அளிக்கும்
மெழுகுவர்த்தியாக என் உயிர் உருக்கிப் போகிறாள் அவள் !

பின்னால் பின்னல்களாய் கைகோர்த்துக் கொண்டு
குதூகலமாய் ஓடி விளையாடும் பள்ளிப் பிள்ளைகளைப் போல
தட தடவெனவே சத்தமிட்டு குலுங்கி குலுங்கி
தடதடக்கும் இரு தடங்களில் கால்பதிக்கும்
விரைந்தோடும் இரயில்வண்டி போனதும் நசுங்கும்
ஒற்றை வெள்ளி நாணயமாய் என்னை நசுக்கிப் போகிறாள் அவள் !

அவள்  இருக்கும் திசையே என் ஆசைச் சூரியன்
தினம் உதிக்கும் காலை கிழக்கென
நிதம் எனக்கு உணர்த்திப் போகிறாள் அவள் !
வரும் ஒளி குவிக்கும் அடியாய்
அவள் நினைவுகளை சுமக்கும் ஜாடியாய்
கரிக்காத காதல் கடலுக்கு மூடும் மூடியாய்
என்னை நினைக்க வைத்து நீங்கிப் போகிறாள் அவள் !

நிறம் கருத்து உடல் பருத்து செம்மாந்து நிற்கும்
பேரலங்காரத்துடன் உலா வரும் பட்டத்து யானையைப் போல
இருக்கும் கரு(டு)ம் பாறையின் மீது பட்டுத் தெறிக்கும்
உயர்மலையின்  மீதிருந்து வீழும் வெள்ளருவியைப் போல
என் நெஞ்சில் பட்டு சிலிர்க்கும் சாரல்களாக சிதறிப் போகிறாள் அவள் !

கைதொட்டால் அகம் மகிழும்
நாசி முகர்ந்தால் மனம் நிறையும்
உடல் பூசினால் பனிச்சிகரமென குளிரும்
பரவுகின்ற மேனியெங்கும் மணம் வீசும்
செங்குருஞ்சி மலைப்பிறந்த சந்தனமென எனது
உள்ளமெல்லாம் நல்வாசம் வீசிப் போகிறாள் அவள் !

தேடுவோருக்கு ஒன்றுமே தட்டுப்படாத
மனம் குழப்பும் சிந்தனைக்கும் மட்டுப்படாத
புரியாத புதிராக அவிழாத முடிச்சுகள் போடும்
பனிக்கால குளிர்க்காற்றைப்போல புத்தி குடையும்
தடயமில்லாத குருதி வழியும் உயிர்க்கொலையைப் போல
என் உள்ளத்தை தடயமின்றி கொன்றுவிட்டுப் போகிறாள் அவள் !

தொட்டால் சுடுகின்ற நெருப்பில்
பட்டால் பொசுங்கும் பஞ்சாய்
விட்டால் மீதமாகும் சாம்பலாய்
என் மனதை சுட்டெரித்துப் பொசுக்கிப் போகிறாள் அவள் !

விழிகள் நூறு வினாக்கள் பார்த்ததும்
சலனங்கள் நூறு சிந்தையில் சுமந்து
நித்தம் நன்றாய் எழுதவும் வகையின்றி
மடித்து வைத்து விரைவாய் வெளியேறவும் மனமின்றி திணறும்
வகையாய் விடையளிக்க விருப்பமின்றித் தவிக்கும்
கடினத் வினாத்தாளைக் காணும் ஒரு சராசரி மாணவனைப் போல
விழியால் மட்டும் பேசி விடைசொல்லாது விலகிப் போகிறாள் அவள் !

எழில்நிலவை எட்டிப் பிடிக்கும் ஏக்கத்தில்
நாளெல்லாம் உழைத்துக் களைத்து விட்டு
கொல்லைப்புறக் கயிற்றுக் கட்டிலில் சாய்ந்து
கவலையுடனே கால் நீட்டிப் படுத்துக் கொண்டு
ஏங்கித் தவிக்கும் ஏதுமற்ற ஓர் ஏழையைப் போல
என்னை ஏங்கவைத்து போகிறாள் அவள் !

உடலுக்கும் உள்ளத்திற்கும் மிகவும் நல்லதென்று
அன்புடனே அவசியமாய் அம்மா அள்ளிப் போட்டாலும்
மறக்காமல் ஒதுக்கி வைக்கும் பொங்கல் மிளகாய்
என்னைத் தள்ளிவைத்து போகிறாள் அவள் !

காதல் பயிருக்கு பூவேலி போட்டு
பறந்து வரும் பறவைகளை நேரம் பார்த்து
ஏமாற்றவே வைக்கோல் கைவிரித்துக் காத்திருக்கும்
சும்மாவே சிரிக்கும் சோளக்காட்டு பொம்மையைப் போல
என்னை கனவுக் காட்டுக்கு காவல்வைத்து போகிறாள் அவள் !

மனதில் உறுதியாய் கட்டிவைத்த காதல் கோட்டையை
கணப்பொழுதில் கடைக்கண் ஓரத்தில் கண்ணியைப் புதைத்து
தரைமட்டமாக்கி விட்டு சந்தோஷத்துடனே
வந்த காரியம் முடிந்ததென கைத்தட்டிக் கொண்டு
என்னை கலங்க வைத்துப் போகிறாள் அவள் !

காட்டில் மாட்டைத் தொலைத்த மேய்ப்பனுக்கு
தன் தலைத்திரும்பும் திசையெல்லாம்
தவறிய அதன் மணியோசை தவறாமல் கேட்பதைப் போல
என்னுடனே அவள் இல்லாத வேளைகளிலும்
இதயக்கூட்டில் அவளின் நினைவோசை நீங்காமல்
கேட்கவைத்து கரையாமல் போகிறாள் அவள் !

சிவந்த ஞாயிறு கதிரொளி பட்டு உருகும்
சுள்ளென மேனி தொட்டால் உரைக்கும்
பச்சைப் பசும்புல் தலைத்தூங்கும்
குளிர்மார்கழிப் பளிங்குப் பனித்துளியைப் போல
குளிர்நிலவு பார்வையில் என்னை உருகவைத்து போகிறாள் அவள் !

சாலையோரம் சாயாமல் சிலையாகவே நிற்கும்
என்றுமே தல(ட)ம் மாறாத தளிர்களாக வளர்ந்திருக்கும்
தண்டின் நடுவில் சிறு சதுரமாய் இடம் வெட்டி
அதில் நிரந்தரமாய் கார்வண்ண எண் பொறித்த
உயர்மரமாய் என்னைக் காக்கவைத்து போகிறாள் அவள் !

ஊரின் எல்லையில் கேட்க நாதியற்று தனியாக நின்றிருக்கும்
ஊரின் பெயரை தன் தலையெழுத்தே என்று சுமந்திருக்கும் 
சாய்ந்து சரிந்து போய் சிதைந்து கிடக்கும்
இரட்டைக் கால் தாங்கும் ஒற்றை ஊர்பலகையாய்
என்னை அவளின் நினைவுகளை நெஞ்சப்பலகையில்
சுமக்கவைத்து நிற்கதியாய் என்னை நிற்கவைத்துப் போகிறாள் அவள் !

பார்வைப் புயல்களை வீசி நடு நெஞ்சில் நங்கூரமிட்டு
பருவத்தின் ஆரவாரப் பரிவர்த்தனைகளோடு
என் மீது உயிர் பறிக்கும் பெரும்படை திரட்டி
போரிட்டு உள்ளத்தை போர்களமாக்கிப் போகிறாள் அவள் !

என் ஆசை அறிந்திருந்தும்
என் விருப்பம் தெரிந்திருந்தும்
என் உள்ளம் புரிந்திருந்தும்
காதல் வெள்ளம் உள்ளங்களில் கரைபுரண்டிருந்தும்
முள் மூடிய கள்ளியாய் மனதை மறைத்துப் போகிறாள் அவள் !

ஒளிநிலவும் குடைபிடிக்கும் கனவுக்காதலியே !
நான் என் வாழ்வின் விடியலுக்காய்
உன் திசைநோக்கிப்  பார்த்திருக்கிறேன்
மழைமேகம் எதிர்பார்த்து ஏங்கித் தவிக்கும்
பாளமாய் வெடித்த செம்மண் நிலமாய்
பூம்பாவைப் பதிலுக்காய் பூத்திருக்கிறேன்

உள்ளங்கால் பாதம் தரையில் பட்டதுமே
கொதித்து எழும்பும் காயக் கொப்புளங்களைத் தரும்
கோடைசாலையாய் நித்தம் கொதித்திருக்கிறேன்

பகலெல்லாம் புல்லும் காய்ந்த வெட்டவெளியில்
வீணாகக் காய்ந்துவிட்டு மனமின்றி மலைமறையும்
மாலைமேற்கு அடர்மஞ்சள் சூரியனைப் போல
நான் மனம் மயங்கிக் கிடக்கிறேன்

உன் விருப்பவினா தெரியாமலே
என் காதல் தேர்வை எழுதிவிட்டேன் நான் 
வெறுப்பில் கோபமாய்க் கிழித்தேறிவாயோ? - இல்லை நீ
விருப்பமாய் என் வாழ்க்கை விடைகளை மதிப்பிடுவாயோ?
உன் முடிவுகளை எதிர்நோக்கி தினம் தினம்
கண்ணுறங்கா மாணவனாய் காத்திருக்கிறேன்

எப்போதும் போகிறாய் என்னை வேண்டுமென்றே நீங்கிவிட்டு
எப்போது வருவாய் என் வாசல் உன் மலர்ப்பாதம் தொட்டு...     
 


 
  
  
          

WEDDING CONVERSATIONS

Conversation between a couple before marriage and after marriage






BEFORE WEDDING CONVERSATION:

HE : I have waited so long for this.

SHE : Do you want me to leave?

HE : No, Never !

SHE : Do you love me?

HE : Yes, I did, I am doing and I will do forever.

SHE : Did you ever cheat on me?

HE : I would rather die than do that.

SHE : Will you kiss me?

HE : Surely, That's my heavenly pleasure.

SHE : Will you hurt me?

HE : No way, I am not such kind of person.

SHE : Can I trust you?

HE : Yes

SHE : Oh, my darling...

AFTER WEDDING CONVERSATION:
If you want to know what will be the conversation between them please read these dialogues bottom to top.

பசித்திருப்போம் ! இரைத் தேடிப் பறப்போம் !



 பசித்திருப்போம் ! இரைத் தேடிப் பறப்போம் !










அதிகாலை எழும் பறவைகளே நீண்ட தூரம் பயணம் செல்லும்.
தேடுகின்ற பறவைகளுக்கே எந்நாளும் பசி இருக்கும்.
பசித்திருப்போம் ! இரைத் தேடிப் பறப்போம் !
உல்லாச வானில் சந்தோஷ சிறகு விரிப்போம் !
தொடுவானம் வரையிலும் வானம் அளப்போம் !
எதிர் வரும் துன்பக்கடலையும் அள்ளிக்குடிப்போம் !

இந்த பறவைகளைப் போல...
அனைவருக்கும் இந்நாள் இனிய நாளாக அமையட்டும் !!!



முயன்று பார் நண்பா !


முயன்று பார் நண்பா !


முயன்று பார் நண்பா !
வெற்றி முத்தமிடும் உன் காலடியில் !

நடக்க முயன்று  - நீ
காலடி பதித்தால் - தூரம் ஒன்றும் சுமையல்ல !

பறக்க முயன்று - நீ
சிறகை விரித்தால் - வானம் ஒன்றும் பெரிதல்ல !

முளைக்க முயன்று - நீ
முடிவு செய்தால் - பூமி ஒன்றும் தடையல்ல !

கடக்க முயன்று - நீ
வல்லமை கொண்டால் - ஆழ்கடல் ஒன்றும் ஆழமல்ல !

இவ்வுலகில் எல்லா எதிர்ப்புகளும்
முயற்சியைக் கண்டு முட்டிப் போடும் எதிர்ப்புகளே !

துணிவை சுமந்து செயல்பட்டால் - நம்
சிரசில் மின்னும் வெற்றி மகுடம் சாத்தியமே !

Thursday, January 10, 2013

Sharing Some Exotic Experiences...


Sharing Some Exotic Experiences...



Have you experienced this exotic heartfelt moments ever....?
If no, Please read below...

1) Touching the tiny softy and rosy fingers of newly born baby with so softness.

2) Speaking with an old dear school friend, seeing after unexpectedly after long years on a shiny sunny sunday evening sitting together and sharing their past in the breezy sand shore.

3) Waiting with extreme curiosity for a call or a message blink with great intention to attend in our mobile expecting from our beloved ones when you are alone in your home.

4) Gently Riding your favourite single bike viewing the sea scape nearby the long going highways while pleasant drizzling showering with casual drops.

5) Walking lonely in the strange soundless street or road covered with extreme darkness at the snowfall late night carrying suspense of anything may happen in the heart and moving forward.

6) Speaking with your loved ones through the mobile by standing in front of the mirror and seeing your cute reflections of your emotions and expressions.

7) Happily hearing melodious music you like most and sharing the sweet moments of your life, distributing with delicious food in the greenery covered meadow in the hill side with your family and friends while going to a picnic or a tour.

8) Watching seriously the cluster of twinkling stars and the mono milky moon in the crystal clear summer night sky lying on your terrace alone.

If you not yet experienced till, please make it soon.
Otherwise you will definitely miss the evergreen beautiful moments in your life.

Life is nothing but combining the sweetness of memories by experiencing it with wholeheartedly.  

Wednesday, January 9, 2013

INNOCENCE OF A CHILD


INNOCENCE OF A CHILD



A Cute lazy kid : "Mom, Please give me a glass of water".

Mom : "You come and drink. I am so busy".

Kid : "Please mom I need water, Bring me soon".

Mom : "If you repeat this, I will slap you".

Kid : "When you come to slap me, Please bring me the water".

"A Child never grows to its mother till her lifetime ends.
 A Child is always a child to its beloved mother".

THREE LESSONS OF A CHILD


THREE LESSONS OF A CHILD




The three things we must learn from a child

1) To be happy for no reason in any situation.

2) To be busy always in doing something and enjoying.

3) To know how to demand even small things without any ego.

Please don't let to grow the "real child" inside you...

Be a child but don't be childish.

சுகமாகும் சுமைகள்


சுகமாகும் சுமைகள் 




வாழ்வில் தோன்றும் சுமைகள்
உள்ளம் செதுக்கும் கலைகள்

எல்லா சுமையுமே தீராத சுமையாகுமே
சுமக்க உனக்கு தீர மனமில்லாத போது

சுமைகளையும் சுகங்களாக
உருமாற்றிக்கொள்வதில் தான் உள்ளது
உன் வெற்றியின் தார்மீக ரகசியம்

சுமைகளை சுகமென்று சுமப்போம்
இனிக்கும் வெற்றிக்கனி சுவைப்போம்.


Tuesday, January 8, 2013

"I AM WAITING"



"I AM WAITING"



"LIFEISNOWHERE"


" LIFEISNOWHERE"



Hello friends....

Read this slowly... "LIFEISNOWHERE"
How did you read this......?
"LIFE IS NO WHERE"......? Or " LIFE IS NOW HERE ".......?

What a beautiful line to say...
" Our life depends on the way we look towards it"

Yes, Our life differs because the our views towards our life makes the difference....


வெள்ளைப் பூனைகளும், கருப்பு எலிகளும்...


வெள்ளைப் பூனைகளும், கருப்பு எலிகளும்



 

கதை சொல்கிறேன் கேளுங்கள் நண்பர்களே !

முன் குறிப்பு : இக்கதையில் வரும் பெயர்களும், பாத்திரங்களும், சம்பவங்களும், என்றும், யாரையும், எதையும்  தனிப்பட்ட முறையில் சார்ந்தவை அல்ல; புண்படுத்தும் நோக்கத்துடன் புனையப்பட்டதல்ல  என்பதை பணிவோடு தெரிவித்துக் கொள்கிறேன்.
இது ஒரு பொதுக் கதை மட்டுமே !!!

தலைப்பு : வெள்ளைப் பூனைகளும், கருப்பு எலிகளும்...

தேனூறும் சோலைகளோடும் பாலோடும் தெளிந்த
செவ்விளநீர் நதிகள் கரை புரண்டோடும்
பழம் பெரும் புகழ் தேசம் ஒன்று
ஓங்கியே பாரினில் இருந்ததுவாம்...

அங்கே வளங்கள் கொழிக்கும்; நிலங்கள் செழிக்கும்
நெடிதுயர்ந்த காட்டு மரங்கள் வளப்புடனே செம்மாந்து நிற்கும்
வயல்வெளிகள் பொன்நெல்லை தாளாது சுமக்கும்
பொன்னும் வைரமும் பூமியின் நிலவறையில் பதுங்கிக் கிடக்கும்
வாசனைப் பொருட்கள் வனமெங்கும் வாசம் வீசி மணக்கும்
இல்லாத செல்வம் இங்கு ஏதுமில்லை என்று
மற்ற தேசங்கள் அதைக் கண்டு வியக்கும்

சமயத்தாலும் சடங்குகளாலும் சாதியாலும்
சிக்குண்டு சிதறிப் போய் இருப்பினும்
இனத்தாலும் குலத்தாலும் பழக்கத்தாலும்
தனித்தனியாய்ப் பிரிந்திருப்பினும்
செம்மண் சேற்றில் கலந்து விட்ட நன்னீரைப் போல
பூசல்களின்றிப் புவியிலே பூத்திருந்த புண்ணிய பூமியாம் அது...

காலம் காலமாய் கதைகள் பலநூறு
இத்தேசத்தைப் பற்றி உலகமெல்லாம் பறந்து
பற்றிப் பரவும் காட்டுத்தீ போல பரவிக் கிடந்தது
உலகின் மக்கள் யாவரும் தன் வாழ்வில்
ஒருமுறையேனும் இத்தேசம் கால் தொட்டு வர
கனவு கண்டு இமை மூடாது காத்திருந்தனர்
என்று காலம் கிட்டும் என்று எதிர்பார்த்திருந்தனர்

கடுமையாய் சூறாவளி வீசினாலும்
பொங்கி எழுந்து கடல்புனல் கொந்தளித்தாலும்
தளராத முயற்சி மனதில் கொண்டு
திசைமாறிப் போனாலும் தரைதொட்டே தீருவோம்
நிச்சயமாய் அந்த கனவுத் தேசத்தை
கண்டுபிடித்தே கரை சேர்வோம் என்று
பாய்மரக் கப்பலேறி பாரெங்கும் பயணப்பட்டனர் மக்கள்

இத்தேசம் பிறந்து அயல்தேசம் செல்பவனை
அத்தேசம் வாழ வைக்கிறதோ இல்லையோ
அயல்தேசம் பிறந்து வலசைப் போகும் பறவையாய்
இத்தேசம் வந்து வாழ்கின்ற அயலானுக்கோ
பண்புடனே பாசத்தோடு பாய் விரித்து
பச்சைத்  தலைவாழைக் குருத்து இலை போட்டு
அறுசுவை அமுதம் அளித்து விருந்து படைத்து
எந்த குறையுமின்றி வளமாய் வாழ வைக்கும் இத்தேசம்

அப்படி நெடுங்காலம் முன்னர்
இத்தேசம் அடைந்தே தூங்குவோம்
கண்டுபிடித்தே திரும்புவோம் என்று உறுதியாய் நெஞ்சிலே
கடுமையாய் கங்கணம் கட்டிக் கொண்டு
சில வெள்ளைப் பூனைகள் கப்பலேறி வந்தன
பக்குமாய் என்னென்ன கிடைக்கிறது என்று
விசாரித்து போக விலாசம் தேடி வந்ததாக
விவரம் தெரிவித்து கொஞ்சம் கொஞ்சமாக
வசதியாக வந்து அந்த தேசத்தில் குடியேறிக்கொண்டன

வெள்ளைப் பூனைகள் அதிகார சாட்டையைக் கையிலெடுத்து
பலமான ஆயுதங்களைக் கரம் பற்றி
அங்கே வழிவழியாய் வசித்துவந்த
கருப்பு எலிகளை இரக்கமின்றித் தாக்கின
ஒன்றாய்க் கூடியிருந்த அக்கருப்பு எலிகளை
பிரித்து கூட்டங்கூட்டமாகக் கூறு போடத் தொடங்கின

கைகட்டி வாய்மூடி தருவதையெல்லாம்
விதியே என்று வாங்கிக்கொண்டு
வாயின் வார்த்தைகளைத் தொலைத்துவிட்டு
வாயிருந்தும் பேச வாய்ப்பு மறுக்கப்பட்டு
உயிரையும் , உரிமைகளையும் உறிப்பானையைப் போல்
அடக்குமுறைத்தடியால் ஓங்கியே உடைக்கப்பட்டு
அடிமாடாக ஆயுளுக்கும் அல்லல்பட்டு கிடந்தன
அந்த கருப்பு எலிகள் வெள்ளைப் பூனைகளிடம்

இழந்த உரிமையை மீட்டெடுக்கவும்
இன்னல்களை உடைத்தெறியவும்
வீறு கொண்ட வேங்கைகளாக
கருப்பு எலிகள் யாவும் ஒன்று திரண்டு
அரைசதக் காலமாய் போராட்டம் செய்தன
அடி மேல் அடி அடித்து நகராத
சர்வாதிகார அம்மியையும் சுலபமாக
அஹிம்சை உளி கொண்டு தட்டித் தட்டி
பூட்டியிருந்த அடிமை விலங்குகளை
உடைத்தெறிந்து காட்டின...

சுதந்திரக் காற்றை சுவாசித்தப் பின்னே
கருப்பு எலிகள் சுயராஜ்ஜியத்துடன் சந்தோசம் கொண்டன
சுயநலம் இழந்து தேசத்தின் பொதுநலனுக்காக
போராடிய அந்த எலிகள் இப்போது
சுயநலம் ஒன்றையே சுயமரியாதை என்று எண்ணி
தங்களது சிந்தையில் சுயநலம் மட்டுமே சுமக்கத் தொடங்கின...

தன் தேசத்தின் விடுதலைக்காக முழு மூச்சாய்
சாதி, மதம், இனம், சேர்க்கை, குலம், மொழி என்ற
வேற்றுமைகளை அடிவேரறுத்து 
பேதங்களைக் களைந்து ஒன்றாய்க் கைகோர்த்து
போராடிய கருப்பு எலிகள் இன்று அவை அனைத்தையும்
இன்று வேருக்கு நீருற்றி விருட்சமாக வளர்த்து வருகின்றன...
ஒரு இனக் கருப்பு எலி மற்றொன்ற ஏளனமாய் நோக்கி 
இது வேறு இனமோ என்று வெறியோடு
வெறித்துப் பார்த்து வேற்றுமைப்படுத்தி வெறுக்கத் தொடங்கின...

புண்ணிய அந்த பூமியில் இன்று
பல்வேறு பிரச்சனைகள் பூதாகரமாக
பூமி பிளந்து வெடித்துக் கொண்டிருக்கின்றன
அனைத்து கருப்பு எலிகளுக்கும் பொதுவாக விளங்கும்
நிலம், நீர், காற்று, மண், காடு, நதி ஆகியவற்றை
சதி செய்து சொந்தம் கொண்டு வாழ்ந்து வரும்
சீர்மிகு தேசத்தின் தலைவிதியை தங்களது
தனிப்பட்ட விருப்பங்களின் படி முடிவெடுத்து
மாற்றியமைக்கத் துடிக்கின்றன அந்த கருப்பு எலிகள்

தேசத்தின் பெரிய ஆலமரத்தின் அடியில் அமர்ந்து
பஞ்சாயத்து பேசும் நாட்டாமை எலிகள்
தினந்தோறும் வகைவகையாய் ஊர்சொத்தில்
தின்று கொழுத்தன; அனைத்திலும் சுயலாபம் வாங்கி
செழுமையாய் வசதிகள் செய்து  கொண்டு சல்லாபம் செய்தன
தன்னைப் பெற்றெடுத்த தாய்தேசத்தை தடயமின்றி
இருட்டறையில் விலைபேசி கூறுபோடத் தொடங்கின
எந்த ஒரு கொடுந் தீங்கையும் பாரபட்சம் பார்க்காது
மிக சௌகர்யமாய் செய்து தேசத்தை சிதைத்தன
உல்லாச ஊஞ்சல்களைக் கூரையில் கட்டிக் கொண்டு
ஆடாத ஆட்டம் போட்டு தறிகெட்டுத் திரிகின்றன
அந்த நிறமும், உள்மனமும் கருத்த எலிகள்

அன்று இந்த திவ்விய தேசத்தை
வெள்ளைப் பூனைகள் கள்ளமாய்
கைக்கொள்ளா அணை வெள்ளமாய்க் கொள்ளையடித்து சென்றன
கருப்புப் பொருட்களை எல்லாம் கருப்பு எலிகளிடமிருந்து

ஆனால் இன்று அந்த எலிகள் தங்கள் தேசத்தையே
ஊரை அடித்து உலையில் போட்டு
சோறு பொங்கி சாப்பிட்டுக் கொண்டிருக்கின்றன
எதிர்காலத்திற்கும் வரப்போகும் சந்ததிக்கும்
கதிர்கதிராய் பொருள் சேர்த்து குவிக்கத் தொடங்கின
இங்கே பதுக்கி வைத்தால் தெரிந்துவிடும் என்று
தூரத்து தேசத்திற்கு அவற்றை இரகசியமாய் தூக்கி எரிகின்றன
அயல் மண்ணிற்கு சென்றால் மட்டும்
கருப்புச் செல்வங்கள் வெள்ளையாகி விடுமா ?
அந்த கருப்பு எலிகளின் கணக்குகள் தப்புமா ?

இங்கே ஆய்வு ஒன்றை நடத்தலாமா சொல்லுங்கள்...
இந்த தேசத்தை அதிகமாய்க் கொள்ளையடித்தது யார் என்று ?
அடக்குமுறையை அகிலம் முழுவதும்
அரளி விதைகளாய்த் தூவி தன் குடையின் கீழே
அனைத்தையும் அடக்கி ஆள முயன்ற வெள்ளைப் பூனைகளும்
அமைதியாய் தலைக்கு மேலே தன் கைகளை உயர்த்தி
காட்டிச் சொல்லுமோ அதிகம் நாங்கள் இல்லைஎன்று...

அந்த தேசம் இன்று உடைப்பட்ட கண்ணாடிக் குடுவையாய்
சிதறுண்டுக் கிடக்கிறது ; எலிகளிடம் சிறைப்பட்டுச் சிதைகிறது
கருப்பு எலிகள் இருப்பதையெல்லாம் சுரண்டிக்கொண்டு
கிடைப்பதையெல்லாம் சுருட்டிக் கொண்டு
எதற்குமே கவலைப்படாமல் கும்மாளமாய்க்
கொக்கரித்து கொட்டமடித்து வருகின்றன

சமயம் பார்த்து மீண்டும் எலிகளின் தேசம் நுழைய
நோட்டமிட்டு  நல்ல நேரம் பார்க்கின்றன
மீண்டும் அடிமைப்படுத்த முடியுமா என்று
கைவிலங்கோடு காத்திருக்கின்றன வெள்ளைப் பூனைகள்

கைவிலங்கைப் பூட்டிக்கொள்ள தானாகவே
தங்களது கைகள் நீட்டுமா கருப்பு எலிகள் ?
இனி மீண்டெழவே முடியாதபடி மண் அமிழ்த்தி
கடைசி கருப்பு எலியின் உயிர் மூச்சு பிரியும் வரை
அறுத்துப் போட நல்ல ஆயுதம் தேடுகிறதா
அந்த வெள்ளைப் பூனைகள் ?

தங்கள் தேசம் மீட்க கருப்பு எலிகள் விழித்துக் கொள்ளுமா ?
காலமெல்லாம் அடிமைப்பட்டு கிழிந்துப் போய் கிடைக்குமா ?
வரப்போகும் வஞ்சனைகளை விரட்டியடித்து
உயிர் பிழைத்துக் கொள்ளுமா ?

காலம் என்னும் கவிஞன் தான் விடை எழுத வேண்டும்.

பின்குறிப்பு : இக்கதை புரிந்தால் தயவு செய்து "COMMENT" கொடுங்கள்.     




         

   

  

Saturday, January 5, 2013

என் மனதோரம் ஒரு மழைக்காலம் (என் ஆட்டோகிராப்)


என் மனதோரம் ஒரு மழைக்காலம்
(எனது ஆட்டோகிராப் உங்கள் பார்வைக்கு


சிறு குச்சி கையிலெடுத்து
சிறு பள்ளம் தோண்டி
மண் அகழ்ந்து ஈரப்படுத்தி
விதைபோட்டு வளர்த்த செடியில்
ஆசையாய் மொட்டு விரித்து
இதழ் குவித்து சிரிக்கும் அந்த
முதல் பூ பறித்தது வாசமாய் ஞாபகம்....

சூரியன் மயங்கி மறையும்
மாலை மேற்கு செவ்வானத்தில்
நாளெல்லாம் இரைத் தேடிக் களைத்து
அசதியில் கூட்டமாய்க் கூடு திரும்பும்
தூரத்துப் பறவைகளின்அழகிய
வளைந்த வில் போன்ற அந்த
அணிவகுப்புகள் பார்த்தது அழகாய் ஞாபகம்...

ஜன்னலோர ரயில் பயணத்தில்
கம்பிகளின் ஓரம் நின்று ஊஞ்சலாடும்
பட்டுக் கன்னங்களில் பட்டுத் தெறிக்கும்
சில்லென்ற அந்த மழைச்சாரல் சிலிர்ப்புகள் மனதோடு ஞாபகம்...

சின்ன சின்னதாய் துளி உடைந்து
பூவாளி நீராய் சிந்தித் தெளிக்கும்
புயல் நேரத்து ஊசித் தூரலில்
இளஞ்சூட்டுடன் ஆவி பறக்கும்
இதமாகவே இதழ் பருகும்
அந்த சாலையோர சிறிய கடையின் தேநீர் இதமாய் ஞாபகம்...

யாருக்குமே தெரியாமல் மறைத்து
ரகசியமாய்ப் புத்தகத்தின் நடுவில்
பொக்கிஷமாய்ப் புதைத்துப் பாதுகாத்து
என்றாவது குட்டி போடும் என்ற நம்பிக்கையில்
பார்த்துப் பார்த்து மூடி வைத்திருந்த
அந்த ஒற்றைக் கீற்று மயிலிறகு மென்மையாய் ஞாபகம்...

அவ்வப்போது கிடைக்கும் சில்லறைக் காசுகளை
அடைக்கோழியைப் போல் மூடி வைக்க
சிக்கனமாய் அவற்றைச் சேர்த்து வைக்க
அப்பா கடைவீதியில் வாங்கி வந்த அந்த
மஞ்சள் நிற மாங்கனி மண் உண்டியல் மறக்காமல் ஞாபகம்...

தொலைக்காட்சியில் மட்டுமே கண்டு வந்த
தொடுவானம் வரை நீளும் நீலக்கடலை
முதன்முதலாய் நேரில் கண்கள் விரியக் கண்டு
ஆனந்தத்தின் எல்லையில் உறைந்து போய்
மணல் பாய்விரித்தோடும் கடற்கரையில் நின்றபோது
வேகமாய் ஓடிவந்து கால்களை முத்தமிட்டு நனைத்துப் போன
அந்த வெண்நுரை அலைகள் சிலிர்ப்போடு ஞாபகம்....

ஒவ்வொரு பொங்கல் பண்டிகைக்கும்
தெருவெங்கும் அழகிய தோரணங்களாய்
திருவிழாக் கோலம் சிறப்பாய்ப் பூண்டு
சரக்கொன்றைப் பூக்களாய் சரம்சரமாய்த் தொங்கும்
பின்னிய பச்சை இளங்குருத்து தென்னங் கீற்றுகளும்
காற்றோடு படபடப்பாய்க் கதைகள் பேசும்
அந்த வண்ண வண்ணக் காகிதங்களும் எழிலோடு ஞாபகம்...

முதன்முதலில் பள்ளியில் பயத்தோடு மேடையேறி
உள் நடுக்கத்தை வெளிக்காட்டிக் கொள்ளாமல்
திக்கித் திணறி மூச்சு வாங்கி பேச்சு மறந்து 
எச்சில் காய்ந்து தொண்டை அடைத்து
பதற்றத்துடன் பேசிய பேச்சுப் போட்டியில் எதிர்பாராமல்
பரிசாய்க் கிடைத்த அந்த பச்சைப் பேனா பசுமையாய் ஞாபகம்...

கரிக்கும் உப்பைத் தன்னுள்ளே சுமக்கும்
கனமான வெள்ளைப் பீங்கான் குடுவையை
அம்மா எடுத்து வரச் சொல்லிய போது             
கைத்தவறிக் கீழே விழுந்து உடைந்து போனதால்
பலமாய் என் முதுகில் பதிந்துப் போன
அப்பாவின் அந்த அழுத்தமான
வலதுகை ஐந்து விரல்கள் அழுத்தமாய் பயத்தோடு ஞாபகம்...

புதுமணல் வாங்கி வீடு கட்டியபோது
அம்மாவின் கடுமையான திட்டுகளை
அன்பளிப்பாய் வாங்கிக் கொண்டு
கேட்காமலே வருகின்ற வசைமாரிகளை
இலவச இணைப்பாய் பெற்றுக் கொண்டு
ஈர மணலில் கால்களைப் புதைத்து கொண்டு
குழிவீடு கட்டி விளையாடிய நேரங்கள் ஈரத்தோடு ஞாபகம்...

கடுமையாக உடல்அனலாகக் கொதிக்கின்ற
கோடை சாலையாய் குளிர்க்காய்ச்சல் இரவில்
ஊசிகுத்தி வந்து எழுவதற்கு பலமின்றி
போர்வை இழுத்து படுத்திருந்த வேளையில்
அம்மாவின் கையால் குழைத்துப் பிசைந்து
அன்போடு ஊட்டிக் கொண்ட அந்த
அமுதப் பால்சோறு ஆத்மார்த்தமாய் ஞாபகம்...

திருவிழாக் கூட்டத்தில் கண்களைப் பறிக்கும்
வண்ண ஊதிகளை ஆசையோடு வாங்கி
கூட்ட நெரிசலில் சிக்காமல் கவனமாய்க் கைப்பிடித்து
உடையாமல் பத்திரமாய்ப் பாதுகாத்து
உடன் வீடு வந்து சேர்ந்த பின்னே
தரையில் பட்ட அந்த நொடியில்
சுக்குநூறாய் வெடித்துச் சிதறிய துண்டுகள் ஏமாற்றமாய் ஞாபகம்...

சிறுவயதில் மதுரை மீனாட்சியம்மன் கோவிலுக்கு
குடும்பத்தோடு சென்று சாமி கும்பிட்டு
அங்கே தும்பிக்கை நீட்டும் யானையிடம்
காசு கொடுத்து ஆசி வாங்க நான்
மருகி மருகி மிரண்டுப் போய் நின்ற
அந்த நொடிகள் நீங்காமல் ஞாபகம்...

முதன்முதலாய் நான் முயற்சித்துப் பார்த்து
வண்ணக்குச்சிகளைக் கொண்டு வண்ணம் தீட்டி
அழகாய் புல்வெளி ஒன்றில் நின்று கொண்டு
மருண்ட விழி மலர்ந்து பார்த்திருக்கும் நான் வரைந்த
மான்குட்டி ஓவியத்தைப் பார்த்த மகிழ்ச்சியில்
மனசெல்லாம் பூக்கும் மத்தாப்பைப் போல பூரித்து
மிகுந்த செல்வச் செழிப்போடு மா நிலம் ஆளும்
ஒரு மொகலாயச் சக்கரவர்த்திக்கு அடிதொழும்
அவனது மாண்புமிகு மந்திரிகள் அருகினில் வந்து
புறங்கையை நீட்டச்சொல்லி முத்தமிடல் போல
வரைந்த இப்பிஞ்சுக்  கைகளுக்கு கொடுத்த பெரும் பரிசாய்
என் வலதுபுறங்கை பூவிதழ் பதித்த
அம்மாவின் அந்த அன்பு முத்தம் அடிநெஞ்சில் அற்புதமாய் ஞாபகம்...

இளவெயிலும், மழைதூரலும் ஜோடிக்கிளியென
கொஞ்சிக் கொஞ்சிக் குலவுகின்ற  அந்த
பொன் அந்தி மாலை வேளைதனில்
வானுக்கும் பூமிக்கும் வட்டமாய்ப் பாலமிடும்
வானவில்லைப் பார்த்து பரவசித்து
அனைவரையும் ஓடிவர அவசரமாய்
பார்த்து ரசித்திட விரைந்து வருமாறு
கத்திக்கத்தி அழைத்த அந்த
காட்டுக்கத்தல் சத்தமாய் ஞாபகம்...

பள்ளி இறுதியாண்டில் ஓர்நாள்
மருத்துவமனை ஊர்தியொன்று
வேகமாய் மைதானம் வந்து நிற்பது கண்டு
பரிசோதிக்க வந்திருந்த மருத்துவர்களின் ஊசிக்குப் பயந்து
யாருமே கண்டுபிடிக்க முடியா வண்ணம்
மேசைகளின் மூலைகளிலும்
நாற்காலிகளின் காலடிகளிலும்
அகதிகளாய் ஒளிந்து தஞ்சமடைந்த அந்த
தருணம் தவிப்பாய் ஞாபகம்...

மாலையில் மொட்டை மாடியில் தலைக்கு மேலே
அழகாய்ப் படபடக்கும் சின்னஞ்சிறு சிட்டுகளைக் கண்டு
" ஆத்துல கல் போடு , என் மேல பூ போடு " என்று
நகங்களில் நித்தம் தோன்றிடும்
சின்ன சின்ன வெள்ளைப் புள்ளிகளுக்காய்
கைகளைத் தேய்த்து களி(ழி)த்த அந்த
கணம் கனிவுடனே ஞாபகம்...

சிறுவயது ரயில் பயணத்தின் போது
நாங்கள் அமர்ந்திருக்கும் ரயிலை
மற்றொரு ரயில் மின்னல் வேகத்தில்
கடந்திடும் போது இந்த ரயிலும் கூடவே நகர்கிறதோ
என்ற புதிரோடு நகர்ந்த அந்த
குறு நேர மனக்குழப்பம் பதட்டமாய் ஞாபகம்...

திறந்த புத்தகமாய் தெவிட்டாமல் பேசும்
தெளிவான உள்ளத்துடன் எங்களுடன்
சகலத்தையும் சலிக்காமல் பகிர்ந்துப் பழகும்
அருமைப் பள்ளி நண்பன் தன்னுடைய
கல்விச் சுற்றுலா பயணம் சென்று
உயிர்பிரிந்து பிணமாகத் திரும்பிய அந்த
பொழுது உயிரோடு உறைந்த ஞாபகம்...

எங்கள் பள்ளி விளையாட்டு விழாவில்
எங்கள் அன்பு ஆசிரியர்கள் ஓர் அணியும்
பயிலும் மாணவர்கள் ஓர் அணியும்
திரண்டு நின்று மற்ற மாணவர்கள் அனைவரும்
சுற்றி நின்று கைத்தட்டி கூச்சலிட்டு ஆரவாரம் செய்து
குதூகலமாய்க் குதித்து குதித்து விளையாடிய
என்றும் உள்ளம் துள்ளும் அந்த
கைபந்து விளையாட்டு வேடிக்கையாய் ஞாபகம்...

யாருமில்லாத தனிமைப் பொழுதுகளில்
நீங்காத ரீங்காரமாய் சுற்றிச் சுற்றி
நெஞ்சத்தாமரையை வட்டமிடும் பொன்வண்டாய்
திரும்ப திரும்ப பசுவென அசைபோடும்
மௌனக்குரலில் மனம் பாடும்
உள்ளம் கவர்ந்த அந்த மெல்லிசைப் பாடல்கள் நிறைவாக ஞாபகம்...

என் பள்ளி மைதானம் முழுவதும்
காலைப் பனியில் பூத்திருக்கும் தும்பைப் பூக்களாய்
சீருடையில் மாணவர்கள் நின்று நிறைந்திருக்க
எங்கள் உடற்கல்வி ஆசிரியை
உரக்க ஒலிக்கும் ஒற்றை மேளம் முழங்க
தனித்தீவில் அகப்பட்ட தனி ஆளாய் மேடை நின்று
உடற்பயிற்சி செய்து காட்டி நான் சொல்லிக் கொடுத்த
உடலுக்கும் உள்ளத்துக்கும் உற்சாக உவகை அளித்த
அந்த இனிய நாட்கள் இனிப்பாய் ஞாபகம்...

முதுநிலை கல்லூரி இன்பச் சுற்றுலாவில்
குளிர்பனி கொட்டும் கொடை மலை உச்சியில்
ஒற்றை வெண் பௌர்ணமி நிலவை மட்டும்
தலைக்கு மேலே துணையாய்க் கொண்டு
இருள் சூழ்ந்த அடர் காட்டுப் பகுதியில்
நண்பர்களுடன் கைக்கோர்த்து கொண்டு
மூச்சு வாங்க மலையேறிச் சென்று
திகிலுடனே தரிசனம் செய்த அந்த
குறிஞ்சி ஆண்டவர் கோயில் பயணம் பக்தியோடு ஞாபகம்...

கல்வியியல் கல்லூரியில் தினமும்
தெளிவாய் அழித்து கரும்பலகையின் உச்சியில்
வெண் சுண்ணங்கட்டியில் நாள்தோறும் நான் எழுதும்
புதிய புதிய சிந்தனைச் சுடர்களுக்காக
விழிமலர்ந்து ஆவலோடு எதிர்பார்த்திருக்கும்
என் அருமைத் தோழர்களும், தோழிகளும் காத்திருக்கும்  
அந்த காலைப் பொழுதுகள் புத்துணர்வாய் ஞாபகம்...

கல்வியியல் கல்லூரிக் களப்பயணத்தில்
சர்க்கரை ஆலைக்கு சுற்றிப் பார்க்கச் சென்று
திரும்பத் திரும்ப வயிறு நிரம்ப இலவசமாக
கரும்புச் சாற்றை அளவின்றிப் பருகிவிட்டு
திரும்புகையில் கரும்புகளை கைக்கொள்ளாது
அள்ளி அள்ளி பேருந்தில் நிரப்பிக் கொண்டு
தலைசுற்றி மயங்கி மயங்கி விழுந்து
மினுமினுக்கும் மின்மினிப்பூச்சிகள் சில
தலைசுற்றிப் பறந்த அந்த இதமான
இம்சைப் பொழுது தித்திப்பாய் ஞாபகம்...

கல்வியியல் கல்லூரியில் இடைவேளையில்
சுகமான இளந்தென்றல் உடல் தழுவ
காற்றோடு சலசலத்து வயலோடு ஓடி விளையாடும் 
வெள்ளி நீரோடை வாய்க்காலின் அருகில்
பெரிய தனது கிளைகளை நிழல்குடையென விரிக்கும்
அடிபருத்து நிற்கும் புளியமரத்தின் அடியில்
நண்பர்கள் கூட்டமாய் அமர்ந்து கொண்டு
சகலத்தையும் மிக சௌகரியமாய்ப் பேசிச் சிரித்து
ஒன்றாய்க் கூடிப்  பசி மறந்து பாசத்துடன்
உணவுகளைப் பகிர்ந்துண்ட அந்த
மனம் மகிழும் மதியப் பொழுதுகள் மகிழ்வாய் ஞாபகம்...

இன்னும் இன்னும் வாழ்க்கைச் சாலையில்
நினைவு மைல்கற்கள் நீண்டு கொண்டே செல்கிறது...
பயணங்கள் தொடரும் வரை அது தருகின்ற
ஞாபகங்களும் ஓயாமல் அலையடித்துக் கொண்டே இருக்கிறது...
காலத்தின் கரையில் பதித்து நடந்த கணங்களும்
நெஞ்சோடு நீங்காமல் சுவடு பதித்துக் கொண்டே இருக்கிறது...

நினைவுகள் நிச்சயம் நீளும்
வாழ்க்கை இன்னும் நீளம்....         






  

 



Friday, January 4, 2013

A KEY TO SUCCESS


A KEY TO SUCCESS



Appreciate others
Avoid fearful feelings
Avoid misconceived imaginations
Avoid inferior complexity
Avoid procrastination
Apply presence of mind
Aspire for great achievements

Believe yourself more
Be a positive thinker
Be smart at all costs
Be a goal setter
Be punctual always

Be kind to all
Be a good decision maker
Be optimist in all situations
Be a better problem solver
Be faithful in the flow of life

Be a self-controller
Be an inspirational personality
Be a mind-controller
Be happy all along
Be co-operative with others in all occasions

Crystallize your character
Don't lose your spirit
Dream highly
Dress neatly
Develop challenging attitude
Determine your destination

Empower smiling
Ever enrich your knowledge
Enjoy each and every moment
Examine your everlasting experiences
Focus on your interest and involvement
Face the challenges and difficulties
Fertile new ideas for your future

Have self-encouragement
Have high and noble thoughts
Have clear understanding about yourself and others
Hold the humane in your heart forever
Increase your heights of happiness
Love all and loved by all
Learn lessons from other's mistakes and avoid yours

Motivate your efforts
Never bother about failure
Nurture good feelings
Never withdraw prayer
Possess mental alertness

Perceive with unique view
Possess good tendency
Practice peaceful meditation
Preview the winning point
Precise prompt decision making

Quest for the best opportunities
Saturate your sorrows
Strengthen your will power
Sharpen your intelligence
Refine your innovations
Rejuvenate your activities

Realize your mistakes
Try to be intellectual
Think about the effective time-use
Uplift your abilities utmost

Vanish your pains and pressures
Ward-off your worries
Yield the seeds of perseverance
 Zoom with a Zestful Zeal.

Take these, Hold these, Regulate these
Success bestows automatically on your feet.





அன்பு மட்டும் அநாதையா(ய்)??!!!...


அன்பு மட்டும் அநாதையா(ய்)??!!!...



இறைவன் என்னும் தலைவனின்
ஓர் வழி சன்னதியை அடைய
உலகில் மதங்கள் என்ற பல்லாயிரம் பாதைகள் உண்டு

வாசல்கள் பல்லாயிரம் திறப்பினும்
வந்துசேரும் இடம் என்பது ஒன்றே
மார்க்கங்கள் பலநூறு இருப்பினும்
மனம் தழுவும் மலரடிகள் ஒன்றே

நிறம், மணம் எனப்பல மாறினாலும்
மலருக்கு நடக்கும் பூசைகள் ஒன்றே
மதம், இனம் எனப்பல வேறானாலும்
மனிதனுக்கு மனம் என்பது ஒன்றே

அன்போடு நாம் கழிக்கும் ஒவ்வொரு நிமிடமும்
ஆண்டவனுக்கு அருகிலே நம்மை அழைத்துச் செல்லும்
அகமும் முகமும் மலர்ந்து பழகின்
சுடும் பாறை பகையும் ஆகுமே சுற்ற பந்தம்

அமைதியான அன்பு உள்ளமே
ஆண்டவன் வாழும் ஆலயம்
அன்போடு அமைதி தவழும் ஆன்மாவே
இறைவன் ஆளும் இன்பதேசம்

பச்சைக் (காய்)கறிகளை சமைத்தால்
உருவாகுமே சுவையான பண்டம்
மனதின் இச்சைகளை சமைக்க
தோன்றியதுவே சமயம் - அது
சுழற்றிச் சுழற்றிச் சாட்டையாய்ச் சொன்னது - அன்பு

சமயங்களில் சமயம் கூட சாயம் போகலாம்
ஆனால் எந்த சமயத்திலும் சாயம் போகாதது - அன்பு
எந்த சந்தர்ப்பத்திலும் சாய்ந்து போகாதது - அன்பு
மண் முழுதும் மரித்துப் போனாலும் மரிக்காதது - அன்பு

அருள் வேண்டி பொருள் கொடுத்து
வரம் கேட்டு நின்றால்
அவன் உண்மையான பக்தனில்லை...
பொருள் பெற்று அருள் எடுத்து
வரம் அளித்து நின்றால்
அது உண்மையான தெய்வமுமில்லை...
எவ்வளவு கொடுத்தாலும்
எவ்வளவு பெற்றாலும்
அணுவளவும் குறையாதது - அன்பு

அகன்று கிடக்கும் இந்த
அளப்பரிய பூமிக்களிற்றை
அதிகாரம் கொண்டு அடக்கிடும்
அற்புத அங்குசம் - அன்பு

உள்ளத்தில் உண்மையாய் ஊறியதில்
சிறுதுளி முகந்து மனம் மகிழ்ந்து
நீ கொடுக்கும் உன்னத அன்பு
காலம் கழிந்து பரந்து விரிந்து
கண்ணுக்கெட்டாத எல்லையுடைய
கடலாய் நாளை உன்னிடமே
திரும்ப கரைப்புரண்டு ஓடிவரும் - அன்பு

திறக்காத ஜன்னல்களில் தென்றல் தீண்டாது
எழுதாதப் பக்கங்கள் அர்த்தங்களை அளிக்காது
நீல வானம் நிறம் மாறினாலும் - என்றும்
ஏழு வண்ண வானவில் நிறம் மாறாது
அடிநெஞ்சில் ஊற்றெடுக்கும்
உயிரெனவே துடித்திருக்கும்
இதயத்தின் இசையாக இணைந்திருக்கும்
இதமான தாயின் தாலாட்டு - அன்பு

எழுதி எழுதிக் குப்பைகளில்
சேர்கின்ற வார்த்தைகளைத்
தூங்காமல் துரத்தித் தேடும்
கவிஞனின் கிழிப்பட்ட காகிதக் குவியல் அல்ல - அன்பு
கற்றறிந்த கல்விமாந்தர் பலரும் தம்
அறிவுத்திரிகளைத் தூண்டி விட்டு
உலகிற்கு ஒளிதீபமாய் விளங்க
துணைத்தேடும் பெறுவதற்கு அரிய நூல் தானே - அன்பு

நதிகளும், நாம் நடக்கும் வழிகளும் மாறலாம்
தடைகள் பல தோன்றலாம்; தடங்கள் மாறலாம் ;
தடங்கல் தாண்டலாம் - அது போல
வாழ்வில் வலிகளும், வழியும் விதிகளும் மாறாது;
மனதில் காயங்கள் தோன்றாது
வாழ்க்கை சுவை அனுபவமாய் ஆகாது;
இன்பமும் துன்பமும் சரிபாதி கலக்காது
வாழ்க்கை இனிப்பாய் இருக்காது;
அன்பு இல்லாத இதயம் என்றும்
கிழக்கையே காணாத சூரிய உதயம் !

நாம் கைப்பிடித்து கொண்டு போகும் வழிகள்
சுகமானதாக அமையும்
நம்முடன் கைகோர்த்து கொண்டு நடக்க
அன்பு விரல்கள் அழகாய் அமைந்தால்...

"யாதும் ஊரே யாவரும் கேளீர்" - என்று அன்று
ஒற்றை வரியில் சுழலும் இந்த உலகமனைத்திற்கும்
அன்பின் அளவுகோல் இயற்றி அளந்து சென்றானே
எனது அருமைத் தொன்தமிழ்ப் பாட்டன்
அவனது பேர் எண்ணம் இன்று பொய்த்துப் போனதுவோ ?
பாரெங்கும் அதன் பயன் அறியாமல் பொருளிழந்துப் போனதுவோ ?
யாவருக்கும் அடிநெஞ்சில் அன்புநதி ஆவியாகி
பாளமாகக் வெடித்துக் காய்ந்து ஈரமின்றிப் போனதுவோ ?  

அன்பின் வழியது உயிர்நிலை என்கிறது  தமிழ்ச்சங்கம்
அன்பே உலகின் உயிர்நாடி என்கிறது  உயர்வேதம்
அன்பே பிரதானம் என்கிறது புனித விவிலியம்
அன்பே சிவம் என்கிறது திருமந்திரம்
அன்பென்னும் அருமருந்தை
நெஞ்சமென்னும் அட்சயப்பாத்திரத்தில்
ஆத்மார்த்தமாய்க் கலந்து அமுதாய் அர்பணித்தால்
ஆண்டவனையே அன்பளிப்பாய்ப்
அடைய முடியும் என்கிறது ஆண்டாள் பாசுரம்

ஆம் காலங்காலமாய் கண்ணுங்கருத்தமாய்
போதித்துக் கொண்டுதான் இருக்கிறது
வேதங்களும், சமயங்களும் அன்பை அன்பாக...
ஆனால் மனிதன் தான் எதையும்
ஏற்றுக்கொள்ள துணியாதவனாய்
கண்டுகொள்ளாத காட்டுமரமாய்
மரத்துப் போய் நிற்கிறான்
மனம் மாற மறுத்து திடமாக...

பளபளக்கும் பணத்தை நாடி
போகாத உலகம் போகவும்
செய்யாத முயற்சிகள் செய்யவும்
தயங்காமலும் தளராமலும்
துடிப்பாய் இயங்குகிறது மனித மனம்
ஆனால் அடுத்தவனிடம் எள்ளளவு அன்பு காட்டவும்
அல்லல்படும் இதயத்திற்கு ஆறுதல் அளிக்கவும்
தயங்கித் திணறித் தள்ளாடித் திரும்புகிறது மருகும் அவன் மனம்

அன்புக்கு விலைப் பேச
ஆயிரம் பேர் வரிசையில்
வரிந்துக் கட்டி நிற்கலாம்
ஆனால் அன்பை வழங்க மட்டும்
இங்கே யாரும் எந்த முகப்பிலும் தயாராக இல்லை

அன்பு தொடாத இதயம்
சுயம் இழந்த ரசம் போன கண்ணாடி
செல்லரித்து சிதைந்த செம்மண் கட்டி
மனிதனின் மனங்களை வாங்க
அன்பு ஒன்றே சிறந்த அங்காடி

ஆனால் இன்றோ,
அடிப்பட்ட நாயாக தெருவிலே வீசப்பட்டு
குற்றுயிராய்க் கரைகிறது அன்பு
எந்த கடையில் மலிவாய்க் கிடைக்கும்
என்று தேடிப்பார்த்தாலும்
கண்ணுக்குக் கிடைக்கவில்லை அன்பு 
கண்டுகொள்ள ஆளில்லாமல்
கைவிடப்பட்ட குழந்தையாய்
கதறிக் கதறிக் அழுதுக் கொண்டு
அனாதையாய் நடுத்தெருவில் நிற்கதியாய் நிற்கிறது அன்பு...
அணைத்துக் கொள்ள ஆதரவுக் கரங்களின்றி....