தமிழரின் தொலைநோக்கு அறிவியல் சான்று - 2
இப்பதிவைப் படித்துப் பாருங்கள் தோழர்களே
தமிழரின் திறம் புரியும் உங்களுக்கு....
நாம் வாழும் பூமியின் வடிவம் பற்றியும், அதன் சுழற்சி பற்றியும் பல்வேறு கருத்துக்கள் பண்டைய காலத்தில் இவ்வுலகில் நிலவி வந்தன.
முதன்முதலில் கிரேக்க நாட்டு விண்ணியல் ஆய்வாளர் பிலாலஸ் (Philolaus) (கி.மு.470-385) பூமியானது தினமும் ஒரு மிகப்பெரிய நெருப்பை மையமாக கொண்டு சுற்றி வருகிறது என்றார்.
இந்திய வானவியல் அறிஞர் ஆரியபட்டா (Aryabhata) ( கி.மு 476-550) பூமி கோளவடிவமானது என்றும், அது சூரியனை குறிப்பிட்ட தடத்தில் சுற்றி வருகிறது என்றும் கூறினார்.
அதற்கு பிறகு, கிரேக்க நாட்டு தத்துவியலாளரான அரிஸ்டாட்டில் (Aristotle)(கி.மு.384-322) அங்கே நிலவி வந்த பூமி தட்டையானது அல்ல என்ற கருத்தை மறுத்தார். பழம்பெரும் கிரேக்க வானவியலாளர் அரிஸ்டார்கஸ் (Aristarchus) (கி.மு.310-230) பேரண்டத்தின் மையமாக சூரியன் உள்ளதென்றும், பூமி சூரியனை மையமாகக் கொண்டு சுழன்று வருகிறது என்ற சூரியமையக் கோட்பாட்டை (Heliocentrism) அமைத்தார்.
அதன்பிறகு, போலந்து நாட்டு வானவியலாளர் நிக்கோலஸ் கோப்பர்னிக்கஸ் (Nicolaus Copernicus) (1473-1543) சூரியமையக் கோட்பாட்டை பல்வேறு கருதுகோள்களின்(Hypothesis) அடிப்படையில் பூமியின் சுழற்சியைக் கண்டறிந்தார்.
பின்னர் நவீன அறிவியலின் தந்தை (Father of Modern Science) என்றழைக்கப்படும் இத்தாலி நாட்டு வான் கணிதவியல் மேதை கலிலியோ (Galileo Galilei) (கி.பி.1564-1642) அவர்களால் தொலைநோக்கி கண்டறியப்பட்டு கோள்களின் சுழற்சிகள் மெய்ப்பிக்கப்பட்டன. பின், ரோம் நாட்டை சார்ந்த அறிவியல் அறிஞர் ஜோகன்னஸ் கெப்ளர் (Johannes Kepler) (1571-1630) கண்டறிந்த வானவியல் கோட்பாடுகள் அத்துறையில் பெரும் முன்னேற்றங்களைக் கொண்டு வந்தன.
ஆனால், நம்முடைய பண்டைய தமிழர்கள் வானவியலில் தலைசிறந்தவர்கள் என்பதையும், அவர்களின் தொலைநோக்கு அறிவியல் திறமும் கீழ்காணும் சங்கப்பாடல் சான்று ஒன்று வியக்க வைக்கிறது.
" உலகம் உவப்ப வலன் ஏர்பு திரிதரு - - - - - - 1
பலர்புகழ் ஞாயிறு கடல்கண் டாஅங்கு
ஓஅற இமைக்கும் சேண்விளங்கு அவிர்ஒளி ... "
என்று பத்துப்பாட்டு நூல்களில் முதன்மையான திருமுருகாற்றுப்படையை மதுரைக் கணக்காய நாயனார் மகன் நக்கீரர் தொடங்குகிறார்.
இப்பாடலின் பொருள் யாதெனில் " உலகத்தில் உள்ள உயிர்கள் மகிழ, வலப்பக்கமாக கிழக்கு கடலில் எழுந்து, பலராலும் புகழப்படுவதுமான ஞாயிறு [கதிரவன்], தோன்றுவதைப்போன்று, தம் கண்களின் பார்வையை வேறு எந்தப் பொருள் மீதும் செலுத்தாமல் கண் இதழ்களைக் குவித்து மூடியவாறு இறையருளில் மூழ்கியுள்ள பக்தர்களின் உள்ளத்தில் விளங்குவதும், தம் புறக்கண்களால் நோக்கும் பக்தர்களுக்குத் தொலைவில் நின்று விளங்குவதுமான இயற்கைப் பேரொளி வடிவினன் திருமுருகப்பெருமான்."
இதில் வியப்புக்குரியது என்னவென்றால், இந்த உலகமே வலப்புறமாகவும், (இடமிருந்து வலமாக) பூமி தன்னைத் தானே சுற்றும் சுழற்சியின் காரணமாகத்தான் இரவு பகல் உண்டாகி, கதிரவன் கிழக்கில் தோன்றி மேற்கில் மறைகிறான் என்கிற அறிவியல் உண்மையை இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பாகவே கண்டு உலகிற்கு அறிவித்து வாழ்ந்தவர்கள் தமிழர்கள் என்பது நம் சிந்தை வியக்கச் செய்கிறது.

No comments:
Post a Comment