Wednesday, January 29, 2014

தமிழரின் தொலைநோக்கு அறிவியல் சான்று - 2

தமிழரின் தொலைநோக்கு அறிவியல் சான்று - 2

இப்பதிவைப் படித்துப் பாருங்கள் தோழர்களே
தமிழரின் திறம் புரியும் உங்களுக்கு.... 

நாம் வாழும் பூமியின் வடிவம் பற்றியும், அதன் சுழற்சி பற்றியும் பல்வேறு கருத்துக்கள் பண்டைய காலத்தில் இவ்வுலகில் நிலவி வந்தன.

முதன்முதலில் கிரேக்க நாட்டு விண்ணியல் ஆய்வாளர் பிலாலஸ் (Philolaus) (கி.மு.470-385) பூமியானது தினமும் ஒரு மிகப்பெரிய நெருப்பை மையமாக கொண்டு சுற்றி வருகிறது என்றார்.  

இந்திய வானவியல் அறிஞர் ஆரியபட்டா (Aryabhata) ( கி.மு 476-550) பூமி கோளவடிவமானது என்றும், அது சூரியனை குறிப்பிட்ட தடத்தில் சுற்றி வருகிறது என்றும் கூறினார்.

அதற்கு பிறகு, கிரேக்க நாட்டு தத்துவியலாளரான அரிஸ்டாட்டில் (Aristotle)(கி.மு.384-322) அங்கே நிலவி வந்த பூமி தட்டையானது அல்ல என்ற கருத்தை மறுத்தார். பழம்பெரும் கிரேக்க வானவியலாளர் அரிஸ்டார்கஸ் (Aristarchus) (கி.மு.310-230) பேரண்டத்தின் மையமாக சூரியன் உள்ளதென்றும், பூமி சூரியனை மையமாகக் கொண்டு சுழன்று வருகிறது என்ற சூரியமையக் கோட்பாட்டை (Heliocentrism) அமைத்தார்.  

அதன்பிறகு, போலந்து நாட்டு வானவியலாளர் நிக்கோலஸ் கோப்பர்னிக்கஸ் (Nicolaus Copernicus) (1473-1543) சூரியமையக் கோட்பாட்டை பல்வேறு கருதுகோள்களின்(Hypothesis) அடிப்படையில் பூமியின் சுழற்சியைக் கண்டறிந்தார்.

பின்னர் நவீன அறிவியலின் தந்தை (Father of Modern Science) என்றழைக்கப்படும் இத்தாலி நாட்டு வான் கணிதவியல் மேதை கலிலியோ (Galileo Galilei) (கி.பி.1564-1642) அவர்களால் தொலைநோக்கி கண்டறியப்பட்டு கோள்களின் சுழற்சிகள் மெய்ப்பிக்கப்பட்டன. பின், ரோம் நாட்டை சார்ந்த அறிவியல் அறிஞர் ஜோகன்னஸ் கெப்ளர் (Johannes Kepler) (1571-1630) கண்டறிந்த வானவியல் கோட்பாடுகள் அத்துறையில் பெரும் முன்னேற்றங்களைக் கொண்டு வந்தன.

ஆனால், நம்முடைய பண்டைய தமிழர்கள் வானவியலில் தலைசிறந்தவர்கள் என்பதையும், அவர்களின் தொலைநோக்கு அறிவியல் திறமும் கீழ்காணும் சங்கப்பாடல் சான்று ஒன்று வியக்க வைக்கிறது.

" உலகம் உவப்ப வலன் ஏர்பு திரிதரு - - - - - - 1
பலர்புகழ் ஞாயிறு கடல்கண் டாஅங்கு
ஓஅற இமைக்கும் சேண்விளங்கு அவிர்ஒளி ... "

என்று பத்துப்பாட்டு நூல்களில் முதன்மையான  திருமுருகாற்றுப்படையை மதுரைக் கணக்காய நாயனார் மகன் நக்கீரர் தொடங்குகிறார்.

இப்பாடலின் பொருள் யாதெனில் " உலகத்தில் உள்ள உயிர்கள் மகிழ, வலப்பக்கமாக கிழக்கு கடலில் எழுந்து, பலராலும் புகழப்படுவதுமான ஞாயிறு [கதிரவன்], தோன்றுவதைப்போன்று, தம் கண்களின் பார்வையை வேறு எந்தப் பொருள் மீதும் செலுத்தாமல் கண் இதழ்களைக் குவித்து மூடியவாறு இறையருளில் மூழ்கியுள்ள பக்தர்களின் உள்ளத்தில் விளங்குவதும், தம் புறக்கண்களால் நோக்கும் பக்தர்களுக்குத் தொலைவில் நின்று விளங்குவதுமான இயற்கைப் பேரொளி வடிவினன் திருமுருகப்பெருமான்."  

இதில் வியப்புக்குரியது என்னவென்றால், இந்த உலகமே வலப்புறமாகவும்,  (இடமிருந்து வலமாக) பூமி தன்னைத் தானே சுற்றும் சுழற்சியின் காரணமாகத்தான் இரவு பகல் உண்டாகி, கதிரவன் கிழக்கில் தோன்றி மேற்கில் மறைகிறான் என்கிற அறிவியல் உண்மையை இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பாகவே கண்டு உலகிற்கு அறிவித்து வாழ்ந்தவர்கள் தமிழர்கள் என்பது நம் சிந்தை வியக்கச் செய்கிறது.             

     

Monday, December 9, 2013

சொல்லுதலின் வகைகள்

தமிழ்ச்சொலமுதும்  அதன் தித்திக்கும் பொருட்சுவையும்

சொல்லுதலில் இத்தனை வகை உண்டு...
சொல்லுதல் - என்ற சொல்லுக்கு ஏறக்குறைய 39 சிறப்புப் பொருள்கள் (வகைகள்) உள்ளன.

அவையாவன:

1. அசைத்தல் - அசை அழுத்தத்துடன் சொல்லுதல் (அசை - உறுப்பு)
2. அறைதல் - அடித்து (வன்மையாய் மறுத்து ) சொல்லுதல்
3.இசைத்தல் - ஓசை வேறுபாட்டுடன் சொல்லுதல்
4. இயம்புதல்  - இசைக்கருவி இயக்கிச் சொல்லுதல்
5. உரைத்தல் - அருஞ்சொற்களுக்கு அல்லது செய்யுளுக்கு பொருள்                                                      சொல்லுதல்

6. உளறுதல் - ஒன்றிருக்க ஒன்றைச் சொல்லுதல்
7. எண்ணுதல் - (எண்ணி) என்று சொல்லுதல்
8. ஓதுதல் - காதுக்குள் மெல்லச் சொல்லுதல்
9. கத்துதல் - குரல் ஓங்கி ஒலியெழுப்பிச் சொல்லுதல்
10.கரைதல் - அழைத்துச் சொல்லுதல்

11. கழறுதல் - இடித்துச் (இடித்துரைத்துச்) சொல்லுதல்
12. கிளத்தல் - இன்னதென்று குறிப்பிட்டுச் சொல்லுதல்
13.கிளத்துதல் - குடும்ப வரலாறு சொல்லுதல்
14. குயிலுதல் குயிற்று - குயில் போல் இனிய குரலில் சொல்லுதல்
15. குழறுதல் - நா(நாக்கு) தழுதழுக்கச் சொல்லுதல்

16. கூறுதல் - ஒன்றைக் கூறுபடுத்திச் சொல்லுதல்
17. சாற்றுதல் - பலர் அறியச் சொல்லுதல் (பறை சாற்றுதல்)
18.செப்புதல் - வினாவுக்கு விடை சொல்லுதல்
19. நவிலுதல் - நாவினால் ஒலித்துப் பயிலுதல்
20. நுதலுதல் - ஒன்றைச் சொல்லித் தொடங்குதல்

21. நுவலுதல் - ஒரு நூலின் நுண்பொருள் சொல்லுதல்
22. நொடித்தல் - கதை சொல்லுதல்
23.பகர்தல் - பண்டங்களைப் பகுத்து விலை சொல்லுதல்
24. பறைதல் - மறை (ரகசியம்) வெளிப்படுத்திச் சொல்லுதல்
25. பன்னுதல் - நிறுத்தி நிறுத்திச் சொல்லுதல்

26. பனுவுதல் - செய்யுளால் புகழ்ந்து சொல்லுதல்
27. புகலுதல் - ஒன்றை விரும்பிச் சொல்லுதல்
28. புலம்புதல் - தனக்குத்தானே சொல்லுதல்
29. பேசுதல் - ஒரு மொழியில் சொல்லுதல்
30. பொழிதல் - இடைவிடாது சொல்லுதல் (சொற்பொழிவாற்றுதல்)

31. மாறுதல் - உரையாடலில் மாற்றிச் சொல்லுதல்
32. மிழற்றுதல் - குழந்தையைப் போலச் சொல்லுதல்
33.மொழிதல் - சொற்களைத் தெளிவாக விளக்கிச் சொல்லுதல்
34.வலத்தல் - கேட்பார் மனத்தைப் பிணிக்கச் சொல்லுதல்
35. விடுதல் - மெள்ள வெளிப்பட்டுச் சொல்லுதல்

36. விதத்தல் - சிறப்பாக எடுத்துச் சொல்லுதல்
37. விள்ளுதல் - இடைவெளி விட்டுச் சொல்லுதல்
38. விளத்துதல் - ஒன்றை விவரித்துச் சொல்லுதல்
39. விளம்புதல் - ஓர் அறிவிப்பைச் சொல்லுதல்


  

Sunday, August 4, 2013

உயிர்பிரிக்காத இரத்தம் !

நட்பூக்கள்... 

குணங்கள் பல : மணம் ஒன்று !
(சு)வாசங்கள் பல : நேசம் ஒன்று !
வண்ணங்கள் பல : எண்ணம் ஒன்று !
இதயங்கள் பல : துடிப்பு ஒன்று !
பாதைகள் பல : பயணம் ஒன்று !
கைகள் பல : நம்பிக்கை ஒன்று !

நீ - என் கண்ணாடி
நான் - உன் பிம்பம்
நம் நட்பு - கண்கள்!

நீ - என் சிறகு
நான் - உன் வானம்
நம் நட்பு - காற்று !

நீ - என் குழல் 
நான் - உன் மூச்சு 
நம் நட்பு - இன்னிசை !

நட்பு - நாம் நமக்காய் தேடி நேசிக்கும் முதலாவது அந்நியம் !

நமக்காய் பாயும் உயிர்பிரிக்காத  இரத்தம் !

Saturday, August 3, 2013

நட்பு(பூ)க்கள்

என் இனிய நட்பு(பூ)க்கள் அனைவருக்கும்
நண்பர்கள் தின நல்வாழ்த்துக்கள்

நட்புக் கவிதைகள் சில உங்கள் பார்வைக்கு...
படித்தபொழுது பிடித்ததை பகிர்கிறேன் இப்பொழுது...  

* ஆதி மரத்தின்
ஒற்றை ஆப்பிள் கனியின்
பயன்பாடு காதல்
பண்பாடு நட்பு

* எப்போதும் உடன்பட்டால்தான் காதல்
   முரண்பட்டாலும் நட்பு

* நட்பெனப் படுவதுயாதெனின்  முத்தம் தவிர்த்து
  எச்சில் பகிரும் முதலாவது அந்நியம்

* நட்பெனப் படுவது யாதெனின்
   கண்ணீரோ புன்னகையோ
    முன்படுகிற முதல் விரல்
 
* சொல்வதற்கு ஒன்றுமில்லை
   என்றான பின்பும்
   சொல்வதற்கு இன்னும்
   ஆயிரம் இருக்கிறது நட்பில்
   அதிகம் அதிகமாய்

 * உணவில் உப்பு
    உயர்வில் நட்பு

*  எந்த கல்லூரியில்
    எந்த வகுப்பில்
     யார் சேர்ந்தாலுமே
     யாருமே கற்பிக்காமல்
     கற்றுக்கொள்ளும் ஒரே பாடம் - தோழமை

 * ஒன்றாவது வகுப்பில்
    உடன் படித்தவன் கையை
    oracle வகுப்பில்
     உடன் படிக்கிறவன் கையுடன்
     ஒன்றாய் இணைக்க
     நட்பால்தான் முடிகிறது

*  எதெதுவோ தினமும்
    நினைவுபடுத்துகிறது
    உன்னை எனக்கு
    என்னை உனக்கு எதுவோ ?

  *  முடி திருத்துகிற கடையிலிருந்து
       மனம் திருத்துகிற காதல் வரை
       எல்லாப் பொழுதுகளிலும்
       நிரம்பித் தொடர்கிறான்
       நல்ல நண்பனவன்.

*  எந்த உறவின் பிரிதலிலும்
    ஓர் ஒட்டுப்பசையென
     நட்பு ஆறுதலளிக்கும்
     நட்பின் பிரிவை
     எந்த உறவும்
     ஒட்டி மறைப்பதில்லை

*  கைக்குட்டை, பேனா
     பரிசு கொடுத்தால்
     நட்பு பிரியுமாமே.....?
     கேட்டேன் உன்னிடம்
     "ஊஹும்....
       விஷம் கொடுத்தாக்கூட
       பிரியாது என்றாய்
      கண் வியர்த்தேன்

*  பருவமெய்திய குழந்தைக்குப்
    பாதி ஆசிரியை அவள் அன்னை
    மீதி ஆசிரியையாய்
    தலை வருடி பயம் விலக்கி
    அகம் நுழைந்து முகம் மலர்த்தி
    துணை நிற்கிற தோழி
    அன்னையுமாகிறாள்

*  பட்டப் படிப்பு வந்த பின்னாலும்
    பட்டப்பெயர் சொல்லி
    அழைக்கப்படுகையில்
    நரகமாய் ஒரு சுகம் நேரும்
    நம்மை அழைத்து வரும்
    பழைய நண்பனைப் பார்க்கையில்  






Thursday, January 24, 2013

குடியரசு தின வாழ்த்துக்கள்.





அனைவருக்கும் குடியரசு தின வாழ்த்துக்கள்.

உண்மையாக யார் இந்தியர் ?
எது உண்மை சுதந்திரம் ?

இந்தியாவில் வாழ்பவரெல்லாம்
இந்தியர் அல்லர்
எவருக்குள் இந்தியா வாழ்கிறதோ
அவரே உண்மையான இந்தியர் - இது
என்றோ ஒரு முகம் அறியாத கவிஞனின்
வார்த்தைகள் வரிகளாக வாசித்தது...

நமக்கு சும்மா கிடைக்கவில்லை சுதந்திரம்
தாளாத இன்னல்களை அடைந்து
சொல்லி மாளாத கொடுமைகளைச் சுமந்து
விட்டால் மீளாத இன்னுயிர்களையும், உதிரங்களையும்
கொட்டிக் கொடுத்து விட்ட உயிர்களுக்கு
சன்மானமாகக் கிடைத்ததே சுதந்திரம்
அதை சாதகமாக பயன்படுத்திக் கொள்வதில் தான் 
இன்று எவ்வளவு தந்திரம் - பெயர் சுதந்திரம்

எட்டி உதைத்தாலும் பெற்றவனுக்குத் தான் தெரியும்
பாசப் பிள்ளையின் அருமை
முட்டி மோதினாலும் முயன்று பெற்றவனுக்குத் தான் தெரியும்
பெற்ற பொருளின் அருமை
வெட்டி மாண்டாலும் அரும்பாடுபட்டவனுக்குத் தான் தெரியும்
பெற்ற விடுதலையின் அருமை

இந்த பாரில் பார் (Bar), தம் (புகை) தேடி அலையும்
எனதருமை இளைஞனே...
என்று நீ உண்மையாய் "பாரதம்" தேடி அலைவாயோ?

ஆனால் இன்று பெற்ற சுதந்திரம் எங்கு எப்படி
வாழ்கிறது என்று ஒரு பார்வை...

ஐந்திலேயே அதிகமாய் வளைய வைக்கும்
புத்தக மலைகளை முதுகில் சுமந்து கொண்டு
பிள்ளைகள் பள்ளிக்குப் போய் படித்துவிட்டு
பத்திரமாய் வீடு திரும்பும் வரை பாதி உயிரை
கையில் பிடித்து காத்திருக்கும்
பெற்றோருக்கு உண்டா உண்மை சுதந்திரம் ?

நடுஇரவில் தனியாளாக ஒரு பெண் நடந்து
செல்லும் "பொன்"னாளே நம் நாட்டிற்கு
உண்மை சுதந்திரம் வந்ததென்று
அன்று முழங்கினாரே அண்ணல் காந்தி
நாட்டின் இதயத்திலேயே நஞ்சை விதைக்கும்
நடுஇரவில் வெறிநாய்கள் ஒன்று கூடி
அழகுமலரை சூறையாடிச் சிதைத்தழிக்கும்
இந்த தேசத்தில் உண்டா உண்மை சுதந்திரம் ?

அடிநாக்கில் ருசி மறந்தாலும்
அடிவயிற்றில் பசி மறக்காத இந்த உலகத்திலே
உலகத்திற்கே பசிபோக்க படியளந்த
என் சேற்று உழவன் இன்று பிடி சோற்றுக்கும்
வழியின்றி வளர்த்துவிட்ட பிள்ளைகள்
நட்டாற்றிலே நிற்கதியாய் தவிக்க விட்டுப்போனது போல்
நட்டுவைத்த பயிரெல்லாம் வாய்க்காலில் நீரின்றி
கருகுவது காண மனம் பொறுக்காது
நடுநெஞ்சில் வலிவந்து அவன் உயிர்விடும்
இந்த தேசத்தில் உண்டா உண்மை சுதந்திரம் ? 

யானைகட்டிப் போரடித்த சோழவள நாட்டின்
பெருமையை பக்கங்கள் தோறும் தவறாமல்
புகட்டும் என் தமிழ் புததக சான்று கொண்ட மண்ணில்
இன்று உண்ண உணவுக்கு வழி(வகை)யின்றி
பயிரெல்லாம் உயிர்விட்டுபோக
தான் வளர்க்கும் மாட்டுக்கும் உணவின்றி
தொழிற்சாலையில் கழிவாகத் தூக்கியெறியும்
பஞ்சை நனைத்து போஜனமாக்கும்
இந்த தேசத்தில் உண்டா உண்மை சுதந்திரம் ?

தெருக்கோடியில் நிற்கும் ஏழையை
திரும்பிப் பார்க்கவும் நேரமின்றி
எங்கோ எதற்கோ எதையோ
வேக வேகமாய்த் தேடி அலையும் பெருங்கூட்டம்
ஒருபக்கம் - உள்நாட்டில் தேக்கிவைத்தால்(ள்)
கருப்பாகிப் போகுமென்று தூரத்து தேசத்திற்கு
நாடுகடத்தி வெள்ளையாக்கும்
வித்தை தெரிந்த வசதியான வியாபாரிகள் வாழும்
இந்த தேசத்தில் உண்டா உண்மை சுதந்திரம் ?

நதி, நீர், காற்று, வெளி, நிலம் என ஐந்தினைப்
படைத்தான் பகிர்ந்து வாழ் என்றான் இறைவன்
அதற்கு பஞ்சபூதங்கள் என்று பெயர் படைத்தான் மனிதன்
அப்படி பெயரிட்ட கோபத்தில்தானோ இன்று
பூதாகாரமாக வெடிக்கின்றனவோ
பஞ்சபூதப் பிரச்சனைகள் ?
தாகத்திற்கு சொட்டு நீர் அளிக்காமல்
மாண்டு போன பின்னே அணை திறந்து
வெள்ளமிட்டால் யாருக்குப் பயன் ?
இத்தேசத்தில் உண்டோ உண்மை சுதந்திரம் ?

கனவுகள் ஆயிரம் நெஞ்சிலுண்டு
திட்டங்கள் ஆயிரம் தாளிலுண்டு
சிந்தனைகள் ஆயிரம் புத்தியிலுண்டு
செயல்களை செய்யத்தான் இங்கே
கைகளைக் காணவில்லை, விரைவாய் வருவதில்லை 
அப்படியே கைகள் செய்திட வந்தாலும்
சுயலாபம் சுரண்டாமல், புறங்கையைச் சுவைக்காமல்
எந்த "நல்ல" மனமும் நன்மைக்கு இங்கே இடம் கொடுப்பதில்லை
இந்த தேசத்தில் உண்டா உண்மை சுதந்திரம் ?   

இதை எல்லாம் மீறி
எங்கள் வண்ணங்கள் வேறுபட்டாலும்
எங்கள் எண்ணங்கள் பலசமயம் மாறுபட்டாலும்
"அனைவரும் இந்தியர் " என்ற உணர்வு மட்டும்
உள்ளத்தில் உறுதியாய் பிரியாது என்றும்
உறைந்து நிற்கும் எங்கள் உயிர் மூச்சு பிரியும்(விடும்) வரை...

செங்கோட்டையில் என்றுமே செம்மாந்து பறக்கும்
நம் தேசியக்கொடிக்கு சல்யூட் அடித்தபடி....

மீண்டும் ஒருமுறை அனைவருக்காகவும்
"நல்ல" குடியரசு தின நல்வாழ்த்துக்கள்.
நாடு நலம் பெற வேண்டுமென்று....    
      

Wednesday, January 23, 2013

What is "LIFE" ?




Dear friends....
Do you wanna know What is "LIFE" ?
You continue below...

Life is Beautiful Dew.... there could be nothing simpler than that
Life is noticing the subtle things the butterfly fluttering,
the cuckoo singing, the raindrops falling, the flower blossoming,
Life is a rainbow that harnesses our dreams within the bounty of its colours...

Each second, each minute, each hour and each day is but a little life,
to be cherished as the most precious thing,
Life is acknowledging the Supreme Being power,
Life is an enthusiasm that envelops and binds us all...

Life is being proud of our nation, its progress, its achievements,
Life is to be lived, to be enjoyed and to be laughed with,
Life is sharing of the sorrows, about finding pleasure in the pains,
Sowing some smiles in the gains....

Life is about love, thoughts, feelings, experiences, sharings, empathies...
A serious of suspenseful and secret moments....
That's Life...

 ----- Honourable thanks for 2009 LIC OF INDIA calender.

The essence of this message is:
" Really Life is easy...
When we feel it, take it and make it easy".
 ----------- Really my quote.
                       

Saturday, January 19, 2013

Dilwale Dulhania Le Jayenge


हिंदी:
आप में से कितने इस रोमांटिक सदाबहार जलती हुई प्रेम गीत में अपने दिल खो दिया?
आप में से कितने अपनी सुंदर संगीत और प्यारा लाइनों में भंग?

तुझे देखा ये जान सनम ...
प्यार होता है दीवाना सनम ...


English:
Dilwale Dulhania Le JayengeDDLJ, a romantic comedy released in 1995 was declared an all-time blockbuster and the longest-running film in the history of Indian cinema. As of 2011, it was still playing at the Maratha Mandir theatre in Mumbai.

The legendary and epic love story Dilwale Dulhania Le Jayenge has completed 17 years of successful continuous run at the Maratha Mandir theatre in Mumbai today. DDLJ was released on 20th October 1995.
At the time of its release, DDLJ became the biggest blockbuster of the year, winning 10 Filmfare Awards and a National Award for best popular film of that year.

DDLJ is also one of the only two Indian films that have been included in the list of "1001 Movies You Must See Before You Die", the other film being Mother India.
DDLJ has beaten the record of Sholay as the longest-running film ever in Indian cinema. Here is wishing team DDLJ all the best for another 17 years of successful and continuous run!

தமிழ் :
மனம் மயக்கும் மஞ்சள்நிறச் சோலையிலே 
கண்ணைப் பறிக்கும் கடுகுப்பூ தோட்டத்திலே
வானிறங்கி வந்த வெண்முல்லைத் தேவதையாய் அவள்
வயலின் சுமந்து காதல் தொடுக்கும் மன்மதனாய் அவன்

கேட்கும் நெஞ்சம் மெழுகாய் உருகும்
தேனிசையின் பின்னணி நம்மோடு விரல்கோர்க்கும்
பொங்கி வழியும் இதயமெல்லாம் காதல் வெள்ளம்
அன்பு தொட்டிலில் ஊஞ்சலாடும் இருவர் உள்ளம்

இந்திய சினிமாவின் பொக்கிஷப் படைப்பாய்
காலங்கள் கடந்தாலும் இளமையாய்த் திகழும்
ஓர் அற்புத காதல் காவியம்.

பிடித்திருந்தால் விருப்பம் சுட்டுங்கள்.