Friday, January 4, 2013

SWEET NOTHINGS



SWEET NOTHINGS





Time doesn't wait for you and me, Days pass and years change, you miss your loved ones,
you move away from your close ones, your flow of life changes, enjoying friends change,
people around you change, your relations change, culture changes, climate changes,
your habits change, your likes change, your attitudes and views change...

But your heart has contained some of those precious moments engraved in it deeply and truly,
whether you need it or like it or not...

They are always there, making you happy at sad times and sad at happy times,
You think those greenery happy days filled with cherish and great warmth,
When you have a sparkling thought of that twinkling moments,
Your corners of lips light up the smashing smile and
When somebody with you asks the reason for your smile
Then you just again smile and say " NOTHING "

In your life,
Always be thankful and don't forget that persons who had gifted you the memorable heartfelt moments
such kind of  "SWEET NOTHINGS "...

Thursday, January 3, 2013

சிந்தனைச் சரங்கள்


சிந்தனைச் சரங்கள்



அறிவுக்கோல் ஊன்றி வாழ்க்கைச் சிகரம் ஏறு !
முயற்சியை மூச்சுப் பயிற்சியாக்கி முன்னேறு !
இதயத்தை ஆண்டவனுக்கு அடைக்கலமாய் இரவல் கொடு !
கற்ற கல்வியைக் கண்களாக்கி ஞாலத்தை நோக்கிடு !
கற்பதை விட கற்பித்துக் களி !

முடியாது என்ற ஒன்றை மறந்தேனும் நினைக்காதே !
கொண்ட நோக்கத்தை தீயவழியில் தீண்டாதே !
நல்வழியே நாளும் நிறைவு தரும் என்று நினை !
உயிர்ப்பயிருக்கு அறிவு நீரூற்றி வளர் !
உண்மையென்னும் ஏரைப் பூட்டி உள்ளத்தை உழுதுவிடு !

ஆழ்மனதை அகழ்ந்துப் பார் !
வைர நெஞ்சில் வைராக்கியத்தை விதை !
சுயசிந்தனையில் செயல் புரி !
மகிழ்வித்து மகிழ்வடை !
புன்னகைப் பூத்து பூரிப்படை !

அறிவாற்றலையும் ஆராய்ந்து அறி !
தூய்மையில் நெஞ்சத்தைத் தோய்த்து எடு !
சுகங்களை சுகித்து சுவை காண் !
காற்றையும் கைக்குள் அடை !
கண்ணீரையும் குற்றமற்றதாய் சிந்து !

அடைமழையாய் அன்பை நித்தம் பொழி !
அழியாத அறிவு ஊற்றை ஆகாரமாய் உண் !
அரிதாரம் அணியாத அன்பைப் பூண் !
அமுதத் தேன்மொழியால் அனைவரோடும் அளவளாவு !
இரத்தம் சிந்தாத நல்ல ரௌத்திரம் ருசி !

பாராட்டில் பகட்டாய்ப் பணிந்திடாதே !
போலியான பொன்னைப் போல் மின்னிடாதே !
பேதம் பார்க்காத தோழமையைத் துளிர்க்க விடு !
பொய்யில்லாத பாசத்தைப் பகிர்ந்துக் கொடு !
பகுத்தறிவுப் பாசறையில் பொய்மையைப் பொசுக்கு !

உணர்வுகளின் உயரம் உணர் !
விதைக்குள் விருட்சமாய் அடங்கி இரு !
வறுமையில் உழன்றாலும் உதவிட மறுக்காதே !
வாய்மை என்னும் விதியை வாய்க்குப் பூட்டு !
வேண்டும் என்பதை வெறுக்க விரும்பு !

இரப்போர்க்கு இயன்றதை அளி ! 
காலத்தை கவனித்துக் கருத்தில் கொள் !
என்றும் எப்போதும் நடுநிலைமையில் நில் !
திறமைகளைத் தீயினுள் திரியாய்ப் புதைத்து வை !
தீயில் உருகும் மெழுகாய்ப் பாவத்தைக் கழுவு !

தளர்ந்தாலும் தாழ்ந்தாலும் போராடத் தயங்காதே !
தொலைநோக்குப் பார்வையைத் தூரமாக்காதே !
நாளையை எண்ணி இக்கணம் இழக்காதே !
பெருமை சேர்க்கும் புதுமைக்குப் புத்துயிர் புகுத்து !
போதும் என்ற பண்பைப் புடம் போடு !

மனதின் காயங்களை ம(ற)றைக்க மன்றாடு !
மன்னிப்பையும் முழுமனதுடன் வழங்கு !
மதங்கள் மீறிய மனிதநேயத்தை மனதில் நிறுத்து !
இலக்கு உயர்ந்த உளி கொண்டு சிந்தனைச் சிற்பம் செதுக்கு !
இழுக்கான இதய அழுக்குகளை சருகாய்க் கருக்கு !

பசியைப் பொறுக்கப் பழகு !
சிதைக்கும் சிந்தனைகளைச் சிறையிடு !
எண்ணங்களின் ஊனங்களை உடைத்தெறி !
துணிவு என்னும் வேல் பிடித்து துயரக்களம் காண் !
கள்ளம், பள்ளம் இல்லாத வெள்ளை உள்ளம் கொள் !
கண்ணீருடன் கலந்துள்ள உப்பெனக் கருணை கொண்டிரு !
குலம் குன்றினாலும் குணம் குன்றா நல்மனிதனாய் மணம் கமழு !

கனவிலும் கொள்ளாதே (கல்லாதே) கர்வச் செருக்கு !
என்றும் நீ  - நீக்கமற கொண்டிரு
அழிவே அறியாத அறிவுச் செருக்கு !

Monday, December 31, 2012

அன்புள்ள ஆசிரியருக்கு


 அன்புள்ள ஆசிரியருக்கு 


களிமண்ணாய் கண்கண்ட மாணாக்கரை
சிறப்பான சீர்மிகு செம்பொன் சிலையாக
தான் கைக்கொண்ட கல்விஉளி கொண்டு
கருத்தைக் கவரும் நயம் கொஞ்சும் கலையாக
கீழுள்ள கிணற்று நீரான அவர்தம் வாழ்வை
வாடாத வளமிக்க விஞ்சும் மலர்ச்சோலையாக
மாற்றும் மனமுடைய கவின்மிகு கலைஞனே !

ஆற்றாது செயல்புரியும் ஆசிரியப் பெருமக்களே - உம்மைப்
போற்றாது போவார் உயர்ந்தவர் இல்லையே
வகுப்பென்னும் கருவறையில் வரமளிக்கும்
எங்கள் கோல் ஏந்திய கடவுளே !

பால் மறந்து பள்ளிக்கு வரும் பாலகனுக்கும்
அவனது பால்யம் முதல் பட்டப்படிப்பு வரை
பயிற்றுவித்து பண்டிதனாக்கும்
பகுத்தறிவைப் புகட்டும்
பாரினில் அனுதினமும் பட்டொளி வீசும்  பகலவனே !

நீர் எமக்கு
பண்பையும், அறிவையும் திகட்டாமல் புகட்டி - எமது
திறமையையும், துணிவையும் தளராமல் திரட்டி
கனிவான கல்வியையும், எதிர்கால கனவையும் 
நிறைவாக நெஞ்சில் கலந்துக் களிப்பூட்டி

மணிமணியாய்ப் பயிலும் மாணவர்க்கு
மதிப்பெண்ணையும், மாண்பையும் அளித்து முன்னேற்றி
அவர்தம் வாழ்வின் வடிவை வனப்புடன்
வனைந்துக் கொடுக்கும் கற்பிக்கும் குயவனே !

நீர்
அகிலம் யாவும் அள(றி)ந்த ஆண்டவனையும் புறந்தள்ளி
அன்புடனே அழியாத கல்விக்கண் கொடுத்து
அறிவால் அகிலம் அறியச்செய்த
அன்புள்ள நல்லாசிரியரை - என் மனமே
எந்நாளும் நீ மறவாமல்
போற்றிடுவாய் ! போற்றிடுவாய் ! போற்றிடுவாய் !

Sunday, December 30, 2012

கனவுகள் நெஞ்சில் வர வேண்டும்


கனவுகள் நெஞ்சில் வர வேண்டும் 



கனவுகள் நெஞ்சில் வர வேண்டும்  வர வேண்டும்
நெஞ்சில் வரம் வேண்டும் - நம்
வாழ்வில் என்றும் வேண்டும்

பறக்கவே தோன்றும் சிறகுகள் வேண்டும்
விரிக்கவே தோன்றும் இலக்குகள் வேண்டும்


                                                                     (1)

சோதனைகள் செதுக்கிடவே சாதனைகள் ஆகும்
பாரங்களைச் சுமந்திடவே போதனைகள் ஆகும்
சிந்தும் வேர்வை வெற்றி சூட்டும் காத்திரு நாளை
பொங்கும் இன்பம் பூத்துக் கிடக்கும் உன் மனச்சோலை

விழிக்கவே எழுந்திரு ! விடியட்டும் வாழ்வு !
உழைக்கவே பிழைத்திரு ! மெய்யாகட்டுமே கனவு !
அன்பு நேசம் பாசம் யாவும் ஒரே புகலிடம் !                                (கனவுகள்...)

                                                                       (2)

மணங்கள்  மாறினாலும் மலர்கள் ஒன்று
மதங்கள் மாறினாலும் மனங்கள் ஒன்று
கற்ற கல்வி கண்களாகும் ஒளி பெறும் இன்று
பெற்ற நெஞ்சம் போற்ற வேண்டும் உணர்ந்திடல் நன்று

உனக்குள்ளே உன்னைத்  தேடு
உள்ளம் பெறும் தெளிவு - இன்றே நீ
முளைக்கவே முடிவெடு
மாறட்டுமே மனது
உள்ளம் காணும் இன்பம் யாவும் மெய்யாக வேண்டும் !          (கனவுகள்...)    

An effort for horizon touch


An effort for horizon touch



Fix your target to be achievable
Fetch and flow your effort towards it, which should not be reducible
Enhance your knowledge which does not be perishable
Straighten your attitude which is more valuable

Plan your schedule which should be accessible
Manage your time which should not be compromisable
Develop your personality that should be perceptible
Admire with your activities which should be appreciable

Stimulate your strength which should be sustainable
Compose your confidence and character which should be uniquable
Determine your destination which should be reachable
Hardwork, Effort and self-confidence are the keys for success to be attainable

Frame your hidden potentialities enlighten to the society applicable
Enjoy every moment in your life as more memorable
Utilise the opportunities optimally as unforgettable
I wish you all your ables will come as realizable

பள்ளி செல்ல விரும்பு


பள்ளி செல்ல விரும்பு 
(கல்வி விழிப்புணர்வுப் பாடல் )




பள்ளி செல்வோம் வாரீர் - நாம்
பள்ளி செல்வோம் வாரீர்
துள்ளி எழுந்து ஓடி வந்து
பள்ளி செல்வோம் வாரீர் !

எண்ணும் எழுத்தும் கற்றிடவும்
நற்பண்புகள் பல பெற்றிடவும்
அறியாமை இருளைப் போக்கிடவும்
அறிவுத்தீபம் ஏற்றிடவும்
பள்ளி செல்வோம் வாரீர் !

அறிவு தரும் ஆசிரியரை
அன்போடு வணங்கிடவும்
புத்தகப் பூஞ்சோலைகளில் புகுந்து
இன்பக் கல்வித்தேன் பருகிடவும்
பள்ளி செல்வோம் வாரீர் !

ஒழுக்கம் ஒற்றுமை ஓங்கிடவும்
துணிவோடு பணிவு கொள்ளவும்
வறுமை தீமை விரட்டவும்
நெஞ்சம் காணும் கனவு சுமந்து
பள்ளி செல்வோம் வாரீர் !

சாதி மதம் என்னும் பள்ளம் மூடவும்
இனம் பேதம் என்னும் கள்ளம் ஓடவும்
துயர் நீங்கி இன்பமலர் பூக்கவும் - நம்
வாழ்வை உயர்த்தும் ஏணியெனவெ
பள்ளி செல்வோம் வாரீர் !

கற்கும் கல்வி என்றுமே
உற்ற துணையாகுமே
துன்பத் தாகம் தோன்றும் போதிலே - கல்வி
நல்ல தண்ணீராய்த் தீர்க்குமே
பள்ளி செல்வோம் வாரீர் !

பயிலும் பாடம் யாவுமே
இனிக்கும் செங்கரும்பு ஆகுமே
இருண்ட வாழ்வும் ஒளிருமே
வறண்ட நெஞ்சம் மலருமே
பள்ளி செல்வோம் வாரீர் !

கற்கும் பொழுது என்றுமே
தித்திக்கும் கற்கண்டு ஆகுமே
தோன்றும் ஐயம் நீங்கிப் போகுமே
அகம் கொண்ட அச்சம் அகலுமே
பள்ளி செல்வோம் வாரீர் ! 



மனிதன் என்னும் விதை


மனிதன் என்னும் விதை 



மரங்கள்...
மண்ணில் மிகவும் மகத்தானவை
உதிர்ந்தாலும் உன்னதமானவை  - தன்
சந்ததிகளை சாகாது வளர்ப்பவை

மனிதன் என்னும் வளர்ந்த விதை
பழுத்த பின்புதான்  - தன் உயிரை
உதிர்த்த பின்புதான்
பூமியில் புதைக்கப்படுகிறான்

கனி விழுந்த விதைகளும் அப்படியே
ஆனாலும் ஒன்று
மனிதனால் மட்டும் மீண்டும்
முளைத்தெழுவதற்கு முடிவதில்லையே ஏன் ?

இந்த மண்ணுலகில்  மனிதனுக்கு
மரணம் தான் முடிவா? - அவனால்
மறுபடியும் மீண்டெழ முடிந்தால்
மற்றதை எல்லாம் மதிப்பானா?
ஆணவம் கொண்டு அகிலத்தையே அடக்குவானா?
சாவையே சந்திக்காமல் போனால்
சகலத்தையும் காலடியில் போட்டு அழிப்பானா?

மனிதன் என்ன...
பிடி விலக்கும் மரத்தின் கனிகளா?
வாழ்வறுந்த வசந்த முல்லைகளா?
மூச்சறுந்த மண்ணின் மைந்தர்களா?
மூப்பிலே முதிர்ந்து விழ...

விருட்சத்தை தன்னுள்ளே அடக்கமாய் சுமக்கும்
விதைகள் மட்டும் என்ன
வரம் வாங்கி வந்தவைகளா? - இல்லை அவை
எங்கும் வியாபித்திருக்கும் பரம்பொருளா?
பூமியெங்கும் புனிதத்தை விதைத்த தேவனா?
புதைத்தப் பின்னும் புதிதாய்ப் பூமியில் எழ...

விதைகள் என்ன சாவே சந்திக்காத சஞ்சீவிகளா?
இல்லை இறப்பையே அளிக்காத பிணிகளா?
பூர்வ ஜென்மம் அவை செய்த புண்ணியப் பலனா?
பூமித்தாய் கருக்கொள்ளும் கற்பகக் குழந்தைகளா?

விதைகள் மண்ணில் மரணித்த பிறகே
அவைகட்கு மற்றுமொரு ஜனனம் ஆரம்பமாகிறது
மனிதர்களே ! - நீங்களும் நல்ல
விதைகளாய் மாறுங்கள் - நீங்கள்
மண்ணிலிருந்து மறைந்தாலும் மிஞ்சியுள்ள
மக்களின் மனங்களில் மலருவீர்கள் - என்றும்
மணம் மாறாத மலர்களாக !!!