Sunday, December 30, 2012

பள்ளி செல்ல விரும்பு


பள்ளி செல்ல விரும்பு 
(கல்வி விழிப்புணர்வுப் பாடல் )




பள்ளி செல்வோம் வாரீர் - நாம்
பள்ளி செல்வோம் வாரீர்
துள்ளி எழுந்து ஓடி வந்து
பள்ளி செல்வோம் வாரீர் !

எண்ணும் எழுத்தும் கற்றிடவும்
நற்பண்புகள் பல பெற்றிடவும்
அறியாமை இருளைப் போக்கிடவும்
அறிவுத்தீபம் ஏற்றிடவும்
பள்ளி செல்வோம் வாரீர் !

அறிவு தரும் ஆசிரியரை
அன்போடு வணங்கிடவும்
புத்தகப் பூஞ்சோலைகளில் புகுந்து
இன்பக் கல்வித்தேன் பருகிடவும்
பள்ளி செல்வோம் வாரீர் !

ஒழுக்கம் ஒற்றுமை ஓங்கிடவும்
துணிவோடு பணிவு கொள்ளவும்
வறுமை தீமை விரட்டவும்
நெஞ்சம் காணும் கனவு சுமந்து
பள்ளி செல்வோம் வாரீர் !

சாதி மதம் என்னும் பள்ளம் மூடவும்
இனம் பேதம் என்னும் கள்ளம் ஓடவும்
துயர் நீங்கி இன்பமலர் பூக்கவும் - நம்
வாழ்வை உயர்த்தும் ஏணியெனவெ
பள்ளி செல்வோம் வாரீர் !

கற்கும் கல்வி என்றுமே
உற்ற துணையாகுமே
துன்பத் தாகம் தோன்றும் போதிலே - கல்வி
நல்ல தண்ணீராய்த் தீர்க்குமே
பள்ளி செல்வோம் வாரீர் !

பயிலும் பாடம் யாவுமே
இனிக்கும் செங்கரும்பு ஆகுமே
இருண்ட வாழ்வும் ஒளிருமே
வறண்ட நெஞ்சம் மலருமே
பள்ளி செல்வோம் வாரீர் !

கற்கும் பொழுது என்றுமே
தித்திக்கும் கற்கண்டு ஆகுமே
தோன்றும் ஐயம் நீங்கிப் போகுமே
அகம் கொண்ட அச்சம் அகலுமே
பள்ளி செல்வோம் வாரீர் ! 



No comments:

Post a Comment