மோகமுள்
வா வா வெண்மேகமே
வாழும் என் ஜீவனே
உன்னைக் காணும் நேரம்
என் உயிரும் உருகும்
பாவை பொன்வண்ணமே ஓ....
பேசும் பூவண்ணமே
தயக்கமில்லை என்றபோதும் மொழிகள் பேச கூசுகின்றேன்
விடியும் என்று தெரிந்தபோதும் இரவைக் கழிக்க ஏங்குகின்றேன்
தேவதை கண்களில் மின்னல் பூச்சரம்
பாவை உன் பாசமோ பொங்கும் புதுவெள்ளம்
வெந்நீரில் நீராடும் கமலம்
கரைமேல் கயல்போல் உள்ளம்
(2)
நிலவுஇல்லை என்றபோதும் வானம் பார்த்து வியக்கின்றேன்
மலர்கள் இல்லை என்றபோதும் கொடியில் மணத்தை உணர்கின்றேன்
காதலில் ஏங்கிடும் ஏழை நெஞ்சமே
பூவிழி காணவே ஜீவன் வாழுமே
தள்ளாடும் தோணி என தாபம்
தனலாகுதே தேகம்
(3)
நினைக்கவில்லை எனினும்கூட நொடிகள் தோறும் தவிக்கின்றேன்
விளங்கவில்லை எனினும்கூட விடைகள் தேடிப் போகின்றேன்
பாவையின் பார்வையோ பாயும் அம்புகள்
நித்தமும் தைத்திடும் ஆறா காயங்கள்
கார்காலம் மோதும் மழைமேகம்
முள்ளாய் மலர்கின்றதே மோகம்
No comments:
Post a Comment