Saturday, January 12, 2013

பாரதம் பெற்றெடுத்த வீரத்துறவி


பாரதம் பெற்றெடுத்த வீரத்துறவி




புண்ணிய பூமியாம் பாரதத்தின் ஆன்மீகப் பெருமையை
உலக அரங்கில் சொற்பறைசாற்றிய வீரத்துறவி

"அமெரிக்காவின் சகோதர சகோதரிகளே" என்று
ஆரம்பித்த அன்புப் பேச்சில் அகிலத்தையே கட்டிப்போட்டு
அன்பின் தாத்பர்யத்தை வீரமுரசிட்ட ஞானத்துறவி

தேச பக்தியை நெஞ்சில் உரமிட்ட நூறு இளைஞர்களை
வரமாய்க் கேட்டு இத்தாய்த்திருநாட்டை வல்லரசாக்க
நூற்றாண்டுகள் முன்னரே கனவு கண்ட காவி(ய)த்துறவி

நண்பர்களே !
சுவாமி விவேகானந்தரின் 150 வது பிறந்த நாள் விழா இன்று.
எக்காலமும் வீரத்தை உள்ளத்திலே விதைக்கும்
அவரின் தீரப் பொன்மொழிகள் சில உங்களோடு பகிர்கிறேன்.

1) எந்த வேலையையும் தனது விருப்பத்துக்கு ஏற்றவாறு மாற்றிக் கொள்பவனே சிறந்த அறிவாளி.

2) மலை போன்ற சகிப்புத்தன்மை, இடைவிடாத முயற்சி, எல்லையற்ற நம்பிக்கை இவைதாம் நற்காரியத்தில் வெற்றியைத் தரும்.

3)உண்மைக்காக எதையும் தியாகம் செய்யலாம்; ஆனால் உண்மையை மட்டும் எதற்காகவும் தியாகம் செய்யக்கூடாது.

4) நீங்கள் மகத்தான பணியைச் செய்யப் பிறந்தவர்கள் என்பதில் ஆழ்ந்த நம்பிக்கை வையுங்கள்.

5) மக்கள் என்ன வேண்டுமானாலும் சொல்லட்டும். நீங்கள் உங்களது சொந்த, உண்மையான, உறுதியான முடிவில் பிடிப்புடன் இருங்கள்.

6) நான் எதையும் சாதிக்க வல்லவன் என்று சொல்லுங்கள். நீங்கள் உறுதியுடன் இருந்தால் பாம்பின் விஷம்கூட சக்தியற்றதாகிவிடும்.

7) நீ உன் குறிக்கோளில் வெற்றியடைய வேண்டுமானால் அதைப் பற்றிய எண்ணம்  உன் உடல் முழுவதும் பரவி இருக்க வேண்டும்.

8) உங்களுக்குத் தேவையான எல்லா வலிமைகளும் உங்களுக்குள்ளேயே குடிகொண்டிருக்கின்றன என நம்புங்கள்.

9) நமது நெற்றியில் சுருக்கங்கள் விழட்டும்; ஆனால் இதயத்தில் சுருக்கம் விழவேண்டாம். ஏனெனில் இதயம் கிழடு தட்டக்கூடாது.

10) மனிதன் எந்த அளவுக்கு உயர்ந்தவனாகிறானோ அந்த அளவுக்குத் தக்கபடி அவன் கடுமையான சோதனைகளைக் கடந்து செல்லவேண்டும்.

கவனம் இளைஞர்களே !!!
எதிர்கால இந்தியா உங்கள் உள்ளங்கைகளில் !!!
  

 

No comments:

Post a Comment