Sunday, January 13, 2013

உள்ளத்தின் உறுதி


உள்ளத்தின் உறுதி





உள்ளத்தின் உறுதி இரும்பாய் இருக்கும்போது
உடலின் ஊனம் துரும்பானால் கவலையென்ன?

உள்ளத்தின் இமய வேர்கள் 
உடலின் பாதளத் தரைவரை
ஊடுருவி பற்றிப் பாய்ந்துவிட்ட பிறகு
உலர்ந்து சருகாகிப் போகுமே
ஊனப் பறவையின் சிறகு...

ஊனத்தின் உறையும் ஊதக்காற்று
உள்ளத்தில் வேரோடிய வைர விருட்சத்தை
உயிர் உள்ளளவும் அதை அணுவளவும் அசைத்திட முடியாது...

உடலின் ஊனக்காயங்களை உதறிவிட்டு
உள்ளத்தின் உடைத்தெறியும் கூரிய
உளிநுனிகளால் அதைச் சிதறடித்துவிட்டு
உவகையாய் அதை உருமாற்றிக் கொண்டால் 
உடையாமல் மிளிரும் சிலையாக வாழ்க்கை ஒளிரும் !   

உடலின் ஊனம்
உயிரின் இறுதி வரை கூடவே வந்தாலும்
உடனிருக்கும் அதைத் துணையிருக்கும்
உதிருகின்ற தூசியாய் துச்சமெனக் கருதித் தட்டிவிட்டு  வாழு !

உடையணிந்து அமர்ந்திருக்கும் தெய்வமும் எழுந்து நின்று
உடன் வைத்திருக்கும் கைகளை எல்லாம் ஒன்று திரட்டி
உண்மையான மரியாதையுடன் கைகூப்பி
உனக்கு வாழ்த்துக்களுடன் வணக்கம் சொல்லும் !      

No comments:

Post a Comment