Tuesday, January 15, 2013

அயல்நாட்டு அறிவுரை



அன்பு நண்பர்களே !
அயல்நாட்டு அறிவுரை அறிவோம் !

சீன தத்துவஞானி கன்பூஷியஸ் - ன் சிந்தனைகள்
உங்கள் பார்வைக்கு...

1) என்றுமே உனது தாயைக் கலங்கவிடாதே! - ஏனெனில்
    அவர்களது கண்ணீர்த் துளிகள் கடவுளால் எண்ணப்படுகின்றன.

2) சரியானது எது என்பதை நன்கு உணர்ந்த பின்னும்
    அதை செய்யாமல் இருப்பது பெரிய கோழைத்தனம்.

3) எங்கே போனாலும் நீ உன் முழு இதயத்தோடு போ.

4) எல்லா ஒழுக்க நெறிகளுக்கும் உறுதியான அடிப்படையாக
    இருப்பது பெரும் பணிவுதான்.

5) உங்கள் பலத்தை நீங்களே நினைத்து பெருமிதம் கொள்ளாதீர்கள்;
    இந்த உலகத்தில் உங்களைவிடவும் பலசாலி ஒருவன் உண்டு என்பதை
    நினைவில் கொள்ளுங்கள்.

6) தன்னடக்கமே என்றும் வலிமை; அமைதியே அற்புதமான ஆற்றல்.

7) கோபத்தை அடக்கு; சிறு சிறு சச்சரவால் நீண்டகால உறவும், நட்பும் கூட
    முறிந்துப் போகும். (அதிகமாய் சேர்க்கப்படும் சிறு துளி உப்பு, சுவையான
    பண்டத்தை சீக்கிரம் குப்பையில் சேர்க்கும்)

8) நீ மற்றவர்களுக்குச் செய்யும் நன்மைகளின் மூலமாக உனக்குக் கிடைக்கும்
    மகிழ்ச்சிதான், எல்லா இன்பங்களையும் விட சிறந்தது.

9) கெட்ட காரியம் செய்ய எப்போதும் அச்சப்படு; நீ வேறு எதற்கும் அதிகமாய்
    அச்சப்படத் தேவையில்லை.

10) நீ வீட்டில் உள்ளவர்களுடன் மனம் நிறைய அன்போடு பழகு;
      அப்போதுதான் நாட்டு மக்களிடம் நன்கு பழக முடியும்.         

No comments:

Post a Comment