அன்பு என்னும் அச்சாரம்
அன்பு ஒன்றே அலுக்காமல் சுழல்கின்ற
ஞாலத்தேரின் அடிஅச்சாரம்
உலக உயிர்கள் யாவும் யாரும்
உரைக்காமலே உணர்ந்துக்கொள்ளும்
உலகின் உன்னத மொழி
மண்ணுயிர்கள் யாவைக்கும் மகேசன்
மரணம் வரையில் ம(றை)றக்காமல்
மானசீகமாய் வழங்கிய
ஈடு இணையில்லா மகத்தான பரிசு...
எத்தனை ஆயுதம் புத்தியின் நவீன பாசறையில்
மனிதன் படைத்தாலும் அவை யாவும்
அவன் உயிரைக் குடி(எடு )க்கும் பணியை மட்டுமே
என்றென்றும் சிறப்பாகச் செய்யும்
ஆனால் அன்பென்னும் ஆயுதமே பாசவலை வீசி
அவன் மனங்களை ஆயுளுக்கும் கட்டிபோட்டு
அடிமையாக்கிக் கொல்லும்.
திருவாய் மொழியும் இவ்வுலகில் பிறந்த
எம்மொழியின் அகராதியிலும்
புரிந்துக் கொள்ளவும், தெரிந்து கொள்ளவும்
எவ்வார்த்தையின் துணையும்
தேவைப்படாத மொழி
அதுவே அன்(பு)பின் மொழி....
அன்புச் செங்கோல் ஏந்தி உலகை ஆளுவோம் !
வெறுப்பு என்பதை விஷத்தை என்றும்
விலக்கிவைத்து வாழ்ந்திடுவோம் !
No comments:
Post a Comment