Tuesday, January 15, 2013

ஆயிரம் பழமொழிகள்


எனதருமை சே(சே - தோழர் )க்களே !
ஏன் இந்த ஆயிரம்,
எதற்கு இந்த ஆயிரம் என்கிறீர்களா?

உங்களுக்கு ஆயிரம் பழமொழிகள் சொல்லப் போகிறேன்...
உடனே வியந்து புருவம் உயர்ந்து, வாய் பிளக்க வேண்டாம்...

ஆயிரம் என்ற சொல் வரும் பழமொழிகளை
அன்போடு உங்களிடம் பருகிறேன்.

1) ஆயிரம் வீண் வார்த்தைகளை விட, இதயத்தை வருட
     இதமான ஒரு சொல் போதும்.

2) நொடித்துக் கொண்டு அமுது ஆயிரம் தருவதை விட,
     இன்முகத்தோடு இல்லையென்று சொல்வது சாலச் சிறந்தது.

3) ஆயிரம்முறை சிந்தனை செய்யுங்கள். ஆனால் முடிவை ஒரேமுறை
     சிந்தித்து முடிவெடுங்கள்.

4) ஆயிரம் நூல்களைக் கற்பதைவிட, அறிவும், அனுபவமும் நிறைந்த
     அறிஞர்களின் அறிவுரைகள் பயன்மிக்கது.

5) ஆயிரம் காக்கைகளை விரட்ட ஒரு கல் போதும்.

6) ஆயிரக்கணக்கான நெருங்கிய உறவினர்களைக் காட்டிலும்
    சமூக இரக்கஉணர்வுடைய உள்ளமுருகும் ஒருவர் எவ்வளவோ மேல்.

7) ஆயிரம் கோடி பணம் பகட்டாய் வைத்திருந்தாலும்
     உண்மையான அற்புத நண்பர்கள் இல்லாதவன் பரம ஏழை.

8) ஆயிரம் பேர்களை வென்றவனைவிட, தன்னைத்தானே வென்றவன்
     உண்மையிலேயே பெரிய வீரன்.

9) ஆயிரம் "போய்ச்" சொல்லி ஒரு கல்யாணத்தை நடத்தி வை.
     (இப்பழமொழி பின்னாளில் ஆயிரம் பொய் சொல்லி என்று திரிந்து போனது,
     உண்மையான பொருள் - ஆயிரம் முறை நமது உறவினர்களுக்கும்,
     சொந்த-பந்தங்களுக்கும் போய்ச் சொல்லியாவது ஒரு திருமணத்தை 
      நடத்தி வைக்க வேண்டும் என்பதே)

10) ஆயிரம் ரூபாயில் ஒரு காலணா குறைந்தாலும்கூட
      அது ஆயிரம் ரூபாய் ஆகாது.

No comments:

Post a Comment