நண்பர்களே !
தமிழர் படுகொலைகள் குறித்து வித்தகக் கவிஞர் பா.விஜய் அவர்கள்
எழுதிய "சமர்" என்ற கவிதை தொகுப்பிலிருந்து
ஒன்று உங்களோடு பகிர்கிறேன்...
நடந்து நடந்து
நாங்கள் துவண்டபோது
அலறினோம்
ஏன் களைத்தோம் என்று...
முகாம்களில் தங்கி
மூச்சு விட்டபோதுதான்
முனகினோம்
ஏன் பிழைத்தோம் என்று...
உலகில் கண்டறியப்படும்
ஒவ்வொரு நவீன ஆயுதமும்
ஒரே வேலையைத்தான் செய்கின்றன
அப்பாவி மக்களை
அடியோடு கொல்வதை !
பூட்ஸ் கால்கள் நசுக்கிய
எங்கள் மர்மப் பகுதிகள் கத்தின
இறைவா...
நீ செத்துத் தொலை என்று...
No comments:
Post a Comment